அடித்து நொறுக்கும் இந்த வீரர் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – பாராட்டி தள்ளிய பாகிஸ்தான் வீரர்

Jadeja
Advertisement

உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் என்று நினைத்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. அதன்பின் இந்திய அணிக்குள் பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது ஒரு வழியாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.

rohith

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் அப்பாஸ் இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மாவை போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம். மேலும் பந்துகளை அவர் அபாரமாக கணித்துவிடுகிறார்கள்.

- Advertisement -

பந்துகளை விரைவிலேயே கணித்து விடுவதால் அவரால் பெரிய ஷாட்டுகளை அருமையாக அடிக்க முடிகிறது. மற்றவர்களை போல இவர் பெரிய பலம் கொடுக்கவில்லை என்றாலும் அவர் அடிக்கும் பொழுது பந்துகள் பறக்கின்றன. மிகப்பெரிய ஷாட்டுகளை விதவிதமாக ஆடும் திறமை கொண்ட பேட்ஸ்மன் ரோகித் சர்மா. என்னை பொருத்தவரைக்கும் தற்போது உள்ள இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் தான் என்று நான் கூறுவேன் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

rohith

சமீபத்தில் ஐசிசி வெளியிட்டுள்ள தற்போதைய ஒருநாள் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோலி முதலிடத்தில் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே ஐந்து புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் என்பதால் வரவிருக்கும் தொடரில் முதல் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு ரோஹித்துக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement