சாம்பியன்ஸ் ட்ராபி: டாஸ் பாகிஸ்தான் ஜெயிச்சா என்ன? பிட்ச் மாறினாலும் எங்களுக்கு இது தெரியும்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய இரண்டாவது போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் துவங்கியது. தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

அதனால் நடப்புச் சாம்பியனுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு எதிராக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது. மறுபுறம் முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்யத் தயாராக உள்ளது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

டாஸ் பிரச்சனையில்லை:

பாகிஸ்தான் அணியில் பஃகார் ஜமான் கடந்தப் போட்டியில் காயத்தைச் சந்தித்ததால் இத்தொடரில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதிலாக இமாம்-உல்-ஹக் விளையாடுவார் என்று பாகிஸ்தான் ஹேர் கேப்டன் முகமது ரிஸ்வான் அறிவித்தார். பிட்ச் நன்றாக தெரிவதால் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியை மறந்து விட்டு இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அஸ்வான்னு கூறினார். மறுபுறம் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். மேலும் பாகிஸ்தான் டாஸ் வெற்றி பெற்றாலும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் ரோஹித் கூறினார்.

- Advertisement -

இந்திய அணி:

அத்துடன் பிட்ச் இரவு நேரத்தில் ஸ்லோவாக மாறினாலும் அதில் நங்கூரமாக விளையாடி வெற்றி பெறும் அனுபவம் இந்திய அணியில் இருப்பதாக கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் டாஸ் வென்றார்கள் என்பது முக்கியமில்லை. நாங்கள் முதலில் நன்றாக பௌலிங் செய்ய வேண்டும். கடந்தப் போட்டியை போலவே இந்தப் போட்டியின் பிட்ச் ஸ்லோவாக இருக்கும் என்று தெரிகிறது”

இதையும் படிங்க: புதிய கேப்டன் ரிஸ்வானுடன் முட்டிக்கொண்ட பாபர் அசாம்.. பயிற்சிக்கு வராமலும் அடாவடி – என்ன நடந்தது?

“எங்களிடம் அனுபவம் மிகுந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. எனவே ஆடுகளம் மெதுவாக மாறினாலும் அதில் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு என்பது தெரியும். மொத்தமாக அணியாக நாங்கள் அசத்துவது முக்கியம். கடந்த போட்டி எங்களுக்கு எளிதாக இல்லை. இருப்பினும் அழுத்தத்தின் கீழ் உங்களை நீங்களே சோதித்து பார்க்க விரும்புவீர்கள். நாங்கள் இந்தப் போட்டியிலும் அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்று கூறினார்.

Advertisement