ஓவல் மைதானத்தில் டாஸ் ஜெயிச்சாலே போட்டிய ஜெயிச்சிடலாம் – இப்படி ஒரு விஷயம் இருக்கா ?

Oval
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நாளை செப்டம்பர் 2 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

indvseng

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த போட்டி நடைபெறும் ஓவல் மைதானம் எவ்வாறு போட்டிக்கு கைகொடுக்கும் என்பது குறித்த தகவலை இந்தப் பதிவில் காணலாம். அதன்படி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகளில் டாசில் வெற்றி பெறும் அணியே போட்டியை வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் டாசில் வெற்றி பெறும் அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்களை குவிக்கும் என்பதால் நிச்சயம் டாசில் வெற்றி பெறும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ரன்கள் எடுக்க கடினமாக இருக்கும் என்றும் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் என்பதனால் முதலில் டாஸ் வெற்றி பெறும் அணி ஓவல் மைதானத்தில் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

oval 1

கடைசியாக இங்கு மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும், ஒரு போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement