எங்களோட முயற்சியால் தான் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இந்தியாவுக்கு கிடைத்தனர்..! – கும்ப்ளே அதிரடி பேட்டி..! – காரணம் இதுதான்..?

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு பல்வேறு இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். இந்திய அளவில் விளையாடப்படும் ஐபிஎல் போட்டிகளை போலவே , தமிழக அளவில் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரீமியர் லீக்) நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்டாகாம் தொழில்நுட்பத்தால்தான் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்றவர்கள் இந்திய அணிக்கு கிடைத்தனர் என்று கும்பலே தெரிவித்துள்ளார்.
washington
டி என் பி எல் தொடர்கள் இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது சீசன் வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடக்கவுள்ளது. இவற்றில் ஸ்பெக்டாகாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது என்று இந்திய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளர் கும்பலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்”ஸ்பெக்டாகாம் தொழில் நுட்பம் மிகவும் எளிமையானது. பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட்டில் சென்சார் பொருத்தப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டி விடுவோம். இதன் பேட்டின் செயல்பாட்டை எளிதாக கண்காணிக்கலாம். இந்தத் தொழில்நுட்பம் மூலமாக ஒரு வீரரின் பேட்டிங் வேகம், திறன் மற்றும் பேட்டில் இடத்தில் எந்த இடத்தில பந்து பட்டுள்ளது என்று சரியாக கணிக்க முடியும்.இந்த தொழில் நுட்பம் மூலம் தான் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
kumbley

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார். இருப்பினும் அடுத்த மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் செய்யும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இதில் முதலில் டி20 போட்டிகலிலும், அதனை தொடர்ந்து ஓரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.