
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொலைபேசி நிறுவனமான ஒப்போ நிறுவனம் திகழ்ந்து வருகிறது. 5 வருடகால ஒப்பந்தத்தின்படி ஒப்போ நிறுவனம் இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்தும் வருகிறது.
79 ரூபாய் கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் இந்திய அணியின் ஸ்பான்சராக இருந்த ஓப்போ நிறுவனம் தற்போது இந்த ஐந்து கால ஆண்டுகால ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக் கொள்ள அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்வரை இந்திய அணி ஓப்போவின் ஜெர்சியை அணிந்து விளையாடும்.
அதன்பிறகு செப்டம்பர் மாதம் நடக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து கல்வி சார்ந்த செயலி நிறுவனமான பைஜு’ஸ் நிறுவன ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். இந்த நிறுவனம் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் பைஜு ரவிச்சந்திரன் என்பவரால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சர் நிறுவனமான பைஜு’ஸ் எத்தனை ஆண்டுகள் இந்திய அணியின் ஸ்பான்சராக இருக்கும் போன்ற தகவல்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.