300 போட்டிகளில் ஆடிய எனக்குத் தெரியாதா..? குல்தீப்பிடம் கோவப்பட்ட தோனி….! – காரணம் இதுதான்..?

kuldeep1
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் பல கேப்டன்கள் மாறியுள்ளனர். ஆனால், இந்திய அணிக்காக பல கோப்பைகளை பெற்றுத்தந்த தோனி, எப்போதும் கேப்டன் கூல் என்று தான் அழைக்கப்படுவார். ஆனால் , தோனியே, தன்னிடம் கூல் தன்மையை இழந்து டென்ஷன் ஆகிவிட்டார் என்று இந்திய அணியின் சைனாமேன் என்றழைக்கப்படும் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
KuldeepYadav
சமீபத்தில் ‘வாட் தி டக்’ என்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குல்தீப் தோனியிடம் திட்டு வாங்கிய தருணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்ற குல்தீப் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் ஹட் ட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

ஆனால், அதன் பின்னர் டிசம்பர் மாதம் இண்டோர் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் 20 ஒவர்களை வீசி 129 ரன்களை அளித்துள்ளனர். இந்த போட்டியை நினைவுகூர்ந்த குல்தீப் யாதவ்இண்டோரில் நடைபெற்ற போட்டியில் நான் வீசிய பந்துகள் 6 ஆக பறந்தது. அது மிகவும் சின்ன மைதானம் என்பதால் பேட்ஸ்மேன் பேட்டில் சரியாக படவில்லை என்றாலும் அது மீண்டும் 6 ஆக பறந்தது.

ஒவ்வொரு சிக்ஸ்ஸின் போதும் நான் தோனியை பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து கவரில் உள்ள பீல்டரை எடுத்து விட்டு அவரை டீபிள் போடலாம் என்று கூறினார்.அதற்கு நான் பரவாயில்லை மஹி என்று கூறினேன். அதற்கு அவர் கோபமடைந்து ‘நான் என்ன முட்டாளா, நான் 300 ஒரு நாள் போட்டிகளை ஆடியுள்ளேன்.” என்று கூறினார். பின்னர் நான் தோனி சொன்னது போலவே செய்தேன், விக்கெட் விழுந்தது. அதன் பின் தோனி என்னிடம் வந்து ‘இதை தான் நான் கூறினேன் ‘ என்று கூறினார்.” என்று குல்தீப் தெரிவித்துள்ளார்.

Advertisement