மீண்டும் ஒருமுறை ஐ.சி.சி யின் தண்டைனுக்கு ஆளான விராட் கோலி மற்றும் இந்திய அணி – விவரம் இதோ

IND

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பை அளித்தால் மட்டுமே இந்த போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதற்காக துவக்கத்திலிருந்தே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள், விராட்கோலி 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.

rohith

மேலும் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் நான்காவது வீரராக இறங்கிய ஹார்டிக் பாண்டியா ஆகியோரும் அதிரடியாக 30 ரன்களுக்கு மேல் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் என்ற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது. அதை தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் மலான் ஆகிய இருவர் களத்தில் இருக்கும் வரை ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தது. பட்லர் 52 ரன்களும், மலான் 68 ரன்கள் எடுத்து வெளியேற அதன் பின்னர் தோல்வி உறுதி செய்யப்பட்டது.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த முடிந்து போட்டியின் முடிவில் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஐசிசி 2.22 ஆர்டிகள் விதிப்படி இந்திய அணியின் ஊதியத்திலிருந்து 20% அபராதம் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி வீரர்கள் அனைவர்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Thakur

ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை இந்திய அணி வீசுவதற்கு அதிகம் நேரம் எடுத்துக்கொண்ட காரணமாக ஐசிசி விதிகளின்படி இந்த அபராதம் இந்திய அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது போட்டியின் போது இந்திய அணி பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஸ்லோ ஓவர் ரேட் முறையில் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ind

இந்நிலையில் தற்போது 5வது போட்டியில் இந்திய அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக கள நடுவர்கள் அணில் சௌத்திரி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் அனந்த பத்மநாபன் இந்த அபராதத்தை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.