டி20 உலககோப்பையை எங்க நாட்டுல நடத்துங்க பி.சி.சி.ஐ யிடம் விருப்பத்தை தெரிவித்த சிறிய நாடு – எது தெரியுமா ?

Jay-shah
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியிருந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்த உலக கோப்பை தொடரை 2021 ஆம் ஆண்டிற்கு ஐசிசி தள்ளிவைத்தது. ஆனால் இந்தாண்டு இந்தியாவில் தற்போது நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின்போது கொரோனா வைரஸ் வீரர்களை பாதித்ததால் இம்முறையும் ஐபிஎல் தொடரை இங்கு நடத்த முடியாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

அதேபோல தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் டி20 உலக கோப்பை தொடரை இங்கு நடத்த முடியாது என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் ஐசிசி t20 உலகக் கோப்பையை நடத்தும் முடிவை எடுக்க இந்திய நிர்வாகம் ஆன பிசிசிஐக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் போட்டியை நடத்த முடியுமா ? முடியாதா ? என்பது குறித்து பரிசீலனை செய்து வரும் 28-ஆம் தேதிக்குள் பிசிசிஐ ஐசிசி-யிடம் அறிவிக்க வேண்டும். அப்படி இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடத்த முடியாத பட்சத்தில் அந்த தொடரை நடத்த வேறு ஒரு நாட்டிற்கு உரிமையை ஐசிசி வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை நடத்த முடியாத சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தெரிந்துள்ளது.

Dubai

அத்துடன் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று போட்டிகளை நடத்துவது குறித்து ஐசிசி பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிசிசிஐக்கு தங்களது நாட்டில் டி20 நடத்தி போட்டிகளை நடத்திக் கொள்ளுமாறு தானாக முன்வந்து ஓமன் நாட்டு நிர்வாகம் அழைத்துள்ளது. இதுகுறித்து ஓமன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பங்கஜ் கிம்தி கூறுகையில் : உலககோப்பை போட்டியை நடத்த எங்களை ஐசிசி அணுகியது. நாங்கள் அது தொடர்பாக தற்போது பிசிசிஐ இடம் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

oman

ஐசிசி எங்களிடம் சில தரவுகளை கேட்டது அதனை நாங்கள் அவர்களிடம் கொடுத்துள்ளோம். ஓமன் நாட்டில் இரண்டு கிரிக்கெட் மைதானங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று Flood Lights வசதியுடன் இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். 49 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு டி20 உலகக்கோப்பை நடத்த இந்திய நிர்வாகத்தை முன்வந்து அழைத்துள்ளது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement