உலகின் சிறந்த பும்ராவை அடிக்காமயே எப்படி திணற வைக்கிறேன்னு பாருங்க.. வித்தியாச திட்டம் பற்றி போப் பேட்டி

Ollie Pope
- Advertisement -

இங்கிலாந்து – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. இம்முறை விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றிக்காகப் போராடத் தயாராக உள்ளார்.

மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை தங்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து 2024இல் சந்தித்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 4 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

உலகின் சிறந்த பும்ரா:

அத்தொடரின் முதல் போட்டியில் 196 ரன்களை அடித்த ஓலி போப் இந்தியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் அடுத்தப் போட்டியில் அவரை துல்லியமான யார்க்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கி தெறிக்க விட்ட பும்ரா இந்தியாவை வெற்றி பெற வைத்து பதிலடி கொடுத்தார். இந்நிலையில் இம்முறை உலகின் சிறந்த ஜஸ்ப்ரித் பும்ராவை பவுண்டரிகளாக அடிக்காமல் அடிக்கும் வித்தியாச திட்டத்தை வகுத்துள்ளதாக ஓலி போப் தெரிவித்துள்ளார்.

இது பற்றி போப் பேசியது பின்வருமாறு. “ஆம் அது சவாலாகும். அவரை 3 வித்தியாசமான தொடர்களில் எதிர்கொண்டுள்ளேன் என்று நினைக்கிறேன். அவரை எப்படியாவது அழுத்தத்திற்குள் தள்ள வேண்டும் என்று நீங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறீர்கள். ஒரு நாளில் அவர் 20 ஓவர்கள் வீசினாலே அது அளவுக்கு அதிகமானது. கிரிக்கெட்டில் நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி விளையாட விரும்புவீர்கள்”

- Advertisement -

போப் திட்டம்:

“தேவைப்பட்டால் அதே அழுத்தத்தை எதிரணி வீரர் மீதும் நீங்கள் போட முயற்சி செய்ய வேண்டும். அதற்காக அவரை பவுண்டரியாக அடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஸ்ட்ரைக்கை மாற்றி சிங்கிள்களை எடுத்தும் அழுத்தத்தைப் போடலாம். ஒருவேளை பும்ரா சிறப்பான ஸ்பெல்லை வீசினால் இவரை எப்படி எதிர்கொள்ளாமல் இருக்கலாம் என்பது பற்றி நான் நினைப்பேன்”

இதையும் படிங்க: பும்ராவை பாத்து பயமில்ல.. அவங்க எல்லாரும் அசத்தலன்னா இந்தியாவால் ஜெய்க்க முடியாது.. பென் ஸ்டோக்ஸ்

“என்னுடைய பார்ட்னரும் அதையே நினைப்பார். மிகவும் உயர்தரமான திறன்களைப் பெற்றுள்ள பும்ரா உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். நீங்கள் எதிலிருந்தும் மறையக்கூடாது. எனவே பும்ராவின் அச்சுறுத்தலை ரத்து செய்து ரன்களை அடிப்பதற்கு பல்வேறு முறைகளைப் பார்க்க வேண்டும். இவை அனைத்தும் சூழ்நிலைகளை எளிமையாக வைத்திருப்பதைப் பற்றியதாகும்” என்று கூறினார்.

Advertisement