இந்திய வீரரான இவர் ரொம்ப ஆபத்தானவர். இவரது விக்கெட் தான் நியூசிலாந்து பவுலர்களுக்கு முக்கியம் – நியூசி கோச் பேட்டி

NZ-bw-coach

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. ஐசிசி அறிமுகப்படுத்திய இந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு தற்போது அந்த தொடரின் முதல் இரண்டு அணிகளை பிடித்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

INDvsNZ

அதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றும் என்ற காரணத்தினால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த போட்டி குறித்து ஏற்கனவே பல தகவல்கள் நாள்தோறும் வெளியாகி வரும்வேளையில் முன்னாள் வீரர்கள், தற்போதைய வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் ஜார்ஜென்சன் இந்த இறுதிப்போட்டி குறித்து கூறுகையில் :

Pant

இந்திய அணியில் ரிஷப் பண்ட் ஒரு ஆபத்தான பேட்ஸ்மேன். எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறன் படைத்தவர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் எவ்வாறு விளையாடினார் என்பதை நாங்கள் அறிவோம் எனவே நியூஸிலாந்து பவுலர்களுக்கு ரிஷப் பண்ட் விக்கெட் மிகவும் முக்கியமானது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

pant 1

பந்துவீச்சாளர்கள் நிச்சயமாக சிறப்பாக பந்து வீசி விரைவிலேயே பண்டின் விக்கெட்டை எடுக்க வேண்டும் இல்லையெனில் அவர் நமக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தார் அதேபோன்று இந்திய அணியில் பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ் என ஏற்கனவே வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர் எனவும் அதனால் இந்த போட்டி கடினமாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement