வருணை சமாளிக்க தயாரா இருக்கோம்.. கில், ரோஹித்துக்கு மகிழ்ச்சியான செய்தியை கொடுத்த.. நியூஸிலாந்து கோச்

Gary Stead
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இதே தொடரில் லீக் சுற்றுப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.

எனவே ஃபைனல் போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி இறுதிப் போட்டியில் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்பதை நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் அவரை சமாளித்து சிறப்பாக விளையாடுவதற்கு முயற்சி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வருணை சமாளிப்போம்:

மேலும் நியூசிலாந்து அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி காயத்தால் இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி கேரி பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு எதிரான கடந்தப் போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த வருண் சக்கரவர்த்தி மீண்டும் அசத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்”

“க்ளாஸ் பவுலரான அவர் கடந்த முறை எங்களுக்கு எதிராக தன்னுடைய திறன்களை காட்டினார். இந்தப் போட்டியிலும் அவர் எங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். எனவே நாங்கள் அவருடைய அச்சுறுத்தலை தவிர்த்து எப்படி அவருக்கு எதிராக ரன்கள் குவிக்க முடியும் என்பதில் எங்களுடைய சிந்தனைகளை செலுத்துவோம். மாட் ஹென்றி கடந்தப் போட்டியில் தன்னுடைய தோளில் காயத்தை சந்தித்துள்ளார்”

- Advertisement -

ஹென்றி சந்தேகம்:

“அதனால் அசௌகர்யமாக உணர்ந்த அவர் மீண்டும் பவுலிங் செய்தது நேர்மறையான விஷயமாகும். அவரது காயத்தை பற்றி சோதனைகள் செய்துள்ளோம். அதனால் ஃபைனல் போட்டியில் அவரை விளையாட வைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர் விளையாடுவாரா என்பது எங்களுக்குத் தெரியவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலி கேப்டனா இருந்தாலும் தோனி தான் இந்திய வீரர்களுக்கு அந்த கட்டளையை விதித்தார் – ரவி சாஸ்திரி தகவல்

மாட் ஹென்றி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அடுத்தடுத்த சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவர் இறுதிப் போட்டியில் விளையாடவில்லையெனில் அது ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோருக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில் மாட் ஹென்றி 2024 பெங்களூரு டெஸ்ட் மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் லீக் போட்டியில் புதிய பந்தை ஸ்விங் செய்து அவர்களுக்கு பெரிய சவாலைக் கொடுத்து விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement