இது மட்டும் கிடைச்சா போதும்.. மறுபடியும் துபாய்க்கு போய் இந்தியாவை ஃபைனலில் சாய்ப்போம்.. சான்ட்னர் பேட்டி

Mitchell Santner
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் துபாயில் தங்களது போட்டிகளை விளையாடும் இந்தியா குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்து செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. அதனால் முதல் அணியாக இந்தியா ஃபைனலில் விளையாடத் தகுதிப் பெற்றது. மறுபுறம் தங்களது குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து அணி இந்தியாவிடம் தோல்வியை சந்தித்தது.

இருப்பினும் செமி ஃபைனலில் வலுவான தென்னாப்பிரிக்காவை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. அதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை மீண்டும் துபாயில் நியூசிலாந்து சந்திக்கிறது. வரலாற்றில் 2000 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டிகளில் இந்தியாவை தோற்கடித்த நியூஸிலாந்து கோப்பைகளை வென்றது.

- Advertisement -

ஃபைனலில் மோதல்:

அந்த வகையில் ஐசிசி தொடரின் ஃபைனல்களில் இந்தியாவிடம் ஒருமுறை கூட நியூசிலாந்து தோல்வியை சந்தித்ததில்லை. அதனால் இம்முறை எப்படி நியூசிலாந்து அணியை வீழ்த்தப் போகிறோம் என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் குரூப் சுற்றில் இந்தியாவிடம் சந்தித்த தோல்வி தங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்ததாக நியூஸிலாந்து கேப்டன் மிட்சேல் சான்ட்னர் தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டியில் கிடைத்த நல்ல பாடங்களை எடுத்துக் கொண்டு துபாய்க்கு மீண்டும் சென்று ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு டாஸ் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துபாயில் விளையாடி அங்கு இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கியது எங்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது”

- Advertisement -

இந்தியா – நியூஸிலாந்து:

“அந்தப் போட்டியில் உங்களுக்கு என்ன வேலை செய்தது? எது செய்யவில்லை? என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்களது பவுலர்கள் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக பவுலிங் செய்து சில விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஃபைனலில் டாஸ் வெல்வது நன்றாக இருக்கும்”

இதையும் படிங்க: 19 வருஷமா நேசிச்ச இந்த விஷயத்தில் இருந்து வெளியேறுவது கஷ்டமா இருக்கு – ஓய்வை அறிவித்த முஷ்பிகுர் ரஹீம்

“இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. நாங்கள் ஒரு நல்ல அணியிடம் சவாலை சந்திக்க உள்ளோம். இந்தியாவுக்கு எதிராக விளையாட நாங்கள் செல்ல வேண்டும். அவர்களுடன் மீண்டும் விளையாடுவதற்காக எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறினார். அந்தப் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement