2 ஆவதாக ஒரு வீரரும் விலகல்.. இலங்கை அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி – எப்படி தாக்குப்பிடிக்க போறாங்களோ

Thushara
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக ஏற்கனவே இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது கம்பீரின் பயிற்சியின் கீழ் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியானது நாளை மறுதினம் ஜூலை 27-ஆம் தேதி பல்லக்கல்லே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான இலங்கை அணியும் ஏற்கனவே சரித் அசலங்கா தலைமையில் அறிவிக்கப்பட்டு அவர்களும் இந்திய அணியை வீழ்த்தும் மும்முரத்தோடு தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை அணி அறிவிக்கப்பட்ட பிறகு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சமீரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் அதன் பின்னர் தற்போது மேலும் அந்த அணிக்கு பின்னடைவை தரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இலங்கை அணியை சேர்ந்த இரண்டு அனுபவ வீரர்கள் அடுத்தடுத்து இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அவருக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கா அணியில் சேர்க்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிராக கூட தோல்வியை சந்தித்து குரூப் சுற்று போட்டியுடன் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறியது.

இதையும் படிங்க : இந்தியா இலங்கை டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்.. எந்த நேரத்தில் நடைபெறும் – ஓசில பாக்க முடியாது

இந்நிலையில் இலங்கை அணியானது இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப காத்திருந்த வேளையில் தற்போது அடுத்த அடுத்த வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளது அந்த அணிவுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement