என் பந்துவீச்சில் ஒண்ணுமில்ல..! பேட்ஸ்மேன்கள் திணறுவதற்கு காரணம் இதுதான்..! இந்தியவுக்கு சவால் விடும் இளம் வீரர்..?

rashid2
- Advertisement -

ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வந்தார் இந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற பந்துவீச்சாளர் என்ற படத்தையும் பெற்றார்.
rashid
பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்ப்பட்டு வந்த இந்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர். கடந்த 25 ஆம் தேதி நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று, இறுதி சுற்றிற்கு தகுதி பெற முழு காரணமாக இருந்தார். மேலும் அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதுடன் 10 பந்துகளில் 34 ரன்களை அடித்து அனைவரையும் உறைய வைத்தார் ரஷீத். மேலும் அந்த போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

ரஷீத் கானின் திறமையை அனைவருமே ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் கூட ரஷித் கான் தான் உலகில் மிகச்சிறந்த சூழல் பந்து வீச்சாளர் என்று புகழ்ந்திருந்தார். அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா முன்னாள் சூழல் பந்துவீச்சின் ஜாம்பவான் ஷேன் வர்னே, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஆகியோரும் ரஷித் கானை பாராட்டினர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் எனது பந்துவீச்சு அந்த அளவிற்கு சிறப்பாக ஒன்றும் இல்லை என்று தன்னடக்கத்தோடு கூறியுள்ளார். இதுபற்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை(மே 27) நடந்த இறுதி போட்டிக்கு பிறகு விருது பெற்ற பிறகு அவர் தெரிவிக்கையில் “எனது பந்துவீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை.

- Advertisement -

rashid khan1

எனது திறமை மற்றும் நம்பிக்கையில்தான் எல்லாம் இருக்கிறது. அதோடு என் பந்துவீச்சு முறையை பேட்ஸ் மேன்களால் கணிக்க முடியாது. இதுதான் எனது சிறப்பாக நினைக்கிறேன்.ஆப்கானிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டி. இந்தியாவுடன் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எல்லோருக்கும் கனவு. எனக்கும் அப்படித்தான், இது எனக்கு பெருமையான தருணம். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கண்டிப்பாக கடும் சவால் கொடுப்போம் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

Advertisement