சச்சின், சேவாக்கை விட சவாலை கொடுத்த.. அவருக்கு பந்து வீச எனக்கு பிடிக்காது.. கிரேம் ஸ்வான்

Graeme Swann
- Advertisement -

வரும் ஜனவரி 25 முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை தோற்கடித்து வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றே சொல்லலாம்.

ஏனெனில் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. ஆனால் அதன் பின் கடந்த 12 வருடங்களாக இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணி எதிராகவும் தோற்காத இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் கில்லியாக தொடர்ச்சியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

- Advertisement -

பிடிக்காத பேட்ஸ்மேன்:
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. எனவே 2012 போல இம்முறை இந்தியாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து இத்தொடரில் விளையாட உள்ளது. முன்னதாக 2012இல் இந்தியாவை தோற்கடிக்க கிரேம் ஸ்வான் மற்றும் மான்டி பனேசர் ஆகிய ஸ்பின்னர்கள் இங்கிலாந்துக்கு துருப்புச் சீட்டாக இருந்தனர்.

அந்த வகையில் 2012 தொடரில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், லக்ஷ்மன் ஆகியோரை கூட ஓரளவு சமாளிக்க முடிந்ததாக கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ஆனால் செட்டேஸ்வர் புஜாரா மட்டும் தமக்கு சவாலை கொடுத்ததாக கூறும் ஸ்வான் அவருக்கு எதிராக பந்து வீசுவது பிடிக்காது என தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியை கூட அத்தொடரின் முதல் போட்டிகளையே நான் அவுட்டாக்கினேன்”

- Advertisement -

“நீங்கள் நல்ல பந்துகளை வீசினால் கண்டிப்பாக அவரை அடிக்கடி அவுட் செய்ய முடியும். ஆனால் அந்தத் தொடரில் நான் பந்து வீச விரும்பாத ஒரு பேட்ஸ்மேனாக புஜாரா இருந்தார். ஏனெனில் அவர் தன்னுடைய காலில் வேகமாக செயல்படக் கூடியவர். அந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் அப்போது சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தனர்”

இதையும் படிங்க: சச்சின், சேவாக்கை விட சவாலை கொடுத்த.. அவருக்கு பந்து வீச எனக்கு பிடிக்காது.. கிரேம் ஸ்வான்

“ஆனால் அந்த பேட்ஸ்மேன்களில் புஜாராவுக்கு எதிராக மட்டும் நான் பந்து வீசுவதை விரும்ப மாட்டேன்” என்று கூறினார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக சுமாராக செயல்பட்டுள்ளதால் கழற்றி விடப்பட்ட புஜாரா இம்முறை விளையாடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. ஆனாலும் 2024 ரஞ்சிக்கோப்பையில் இரட்டை சதமடித்துள்ள புஜாரா மீண்டும் கம்பேக் கொடுக்க போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement