- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த ஏமாற்றம்.. டாசுக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் – எடுத்த முடிவு

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியானது ஜூன் 26-ஆம் தேதியான இன்று சற்றுமுன் துவங்கியது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு கிடைத்த ஏமாற்றம் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது அயர்லாந்து அணியானது முதலில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆவாரா? என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

ஏனெனில் இன்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டு கால சாதனையை அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் அவர் இந்த போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். நிச்சயம் இந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த இரண்டாவது போட்டியில் யாராவது ஒரு துவக்க வீரருக்கு ஓய்வு வழங்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 50 ரன்கள் மட்டுமே தேவை.. புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஷ்ரேயாஸ் ஐயர்

இதன் காரணமாக அவர் அடுத்த இரண்டவது டி20 போட்டி வரை காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -