இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் போராடி வருகிறார். 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்திய அவர் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடினார். அந்தத் தொடரில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் மீண்டும் குணமடைந்த போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.
ஆனால் அதைச் செய்யாததால் ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து பிசிசிஐ நீக்கியது. அதன் பின் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவரை புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்தார். அதனால் டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க 2024 துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட வேண்டிய நிலையில் களமிறங்கினார்.
பிசிசிஐ தகவல்:
இருப்பினும் அந்த வாய்ப்பில் ஒரு அரை சதை மட்டுமே அடித்த அவர் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு டக் அவுட்டானார். அவருடைய தலைமையிலான இந்தியா டி அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராகவும் ஷாட் செலக்சனிலும் ஸ்ரேயாஸ் ஐயர் முன்னேறவில்லை என பிசிசிஐ கருதுகிறது.
அதனால் அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடர் உட்பட இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்றும் பிசிசிஐ தெரிவிக்கிறது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ்க்கு எந்த அறையும் இல்லை. யாருக்கு பதிலாக அவரைத் தேர்வு செய்வது? துலீப் கோப்பையில் அவருடைய ஷாட் செலக்சன் கவலைக்குரியதாக இருந்தது”
ஷாட் செலக்சன்:
“நன்றாக செட்டிலான அவர் திடீரென அப்படி ஒரு சுமாரான ஷாட்டை அடித்து அவுட்டானார். ஃபிளாட்டான பிட்ச்சில் நீங்கள் செட்டிலாகும் போது அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தாக ஸ்ரேயாஸ் இராணி கோப்பையில் விளையாடலாம். ஒருவேளை வங்கதேச டி20 தொடருக்கு தேர்வானாலும் அவர் இராணி கோப்பையில் விளையாடிவிட்டு 2வது போட்டியிலிருந்து இந்தியாவுக்கு களமிறங்கலாம்”
இதையும் படிங்க: அனில் கும்ப்ளே சொல்லிருக்காரு.. அதுக்கு ஆசைப்படல.. நான் உடைக்க விரும்பிய ரெகார்ட் இது தான்.. அஸ்வின் பேட்டி
“ஒருவேளை இராணி கோப்பையில் அசத்தவில்லையெனில் ரஞ்சிக் கோப்பையில் அவர் அசத்த வேண்டும். அதே சமயம் அவர் கடந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடியதை கருத்தில் கொள்வோம். துலீப் கோப்பையில் இன்னும் ஒரு ரவுண்ட் இருக்கிறது. அதில் அவர் சதமடித்து ஃபார்மை மீட்டெடுக்கலாம். இருப்பினும் ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவதால் அவர் ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்” என்று கூறினார்.



