காரணமின்றி இப்படி செய்வாங்கன்னு நினைக்கல.. அவரை தவிர்த்து யாருமே பேசல.. ஹனுமா விஹாரி சோகம்

Hanuma Vihari
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய புஜாரா, ரஹானே ஆகியோரை தாண்டி ஹனுமா விகாரி, உமேஷ் யாதவ் போன்ற அனுபவமிக்க வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

அதில் ஹைதராபாத்தை சேர்ந்த ஹனுமா விகாரி கடந்த 2018ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 16 போட்டிகளில் 839 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 2019 வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதமடித்து அசத்திய அவருக்கு புஜாரா, ரகானே ஆகியோர் இருந்ததால் இந்திய அணியில் நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

யாரும் பேசல:
இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் 2020/21 பார்டர் – காவஸ்கர் கோப்பையில் சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் காயத்தை பொருட்படுத்தாமல் 161 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அஸ்வினுடன் சேர்ந்து இந்தியாவின் தோல்வியை தவிர்த்தார். அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்த அவருக்கு புஜாரா, ரகானேவை கழற்றி விட்ட தேர்வுக் குழு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால் 30 வயதாகும் அவரை கண்டுகொள்ளாத தேர்வுக் குழு தற்போது ஸ்ரேயாஸ் ஐயர், துருவ் ஜுரேல் போன்ற வீரர்களின் பக்கம் நகர்ந்துள்ளது. இந்நிலையில் காயத்தை சந்தித்து வெளியேறிய காரணத்தால் தமக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் தேர்வுக்குழு கழற்றி விட்டதை எதிர்பார்க்கவில்லை என ஹனுமா விகாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் மறுவாய்ப்பு பற்றி ராகுல் டிராவிட் தவிர யாருமே தன்னிடம் பேசவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் அணியில் நான் இல்லாததால் சோகத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்துள்ளேன். இருப்பினும் அனைவரும் மேடு பள்ளங்களில் செல்வார்கள். இப்போது ரஞ்சிக் கோப்பையில் ரன்கள் அடிப்பது என்னுடைய வேலையாகும். இந்த வருடம் அணிக்கும் எனக்கும் நன்றாக செல்கிறது. அதில் நிறைய ரன்கள் அடித்து இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். இந்திய அணியிலிருந்து யாரும் என்னிடம் சமீபத்தில் பேசவில்லை”

இதையும் படிங்க: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி.. எங்கே, எப்போது.. வெளியான அட்டவணை

“ஆனால் என்னுடைய கடைசி போட்டிக்கு பின் ராகுல் டிராவிட் நான் எதில் முன்னேற வேண்டும் என்பது பற்றி பேசினார். அதன் பின் யாரும் தொடர்பில் இல்லை. தற்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்ற கட்டத்தில் நான் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்யும் போது என்னால் முடிந்தவற்றை கொடுக்கிறேன். மற்றவை நடப்பது நடக்கட்டும்” என்று கூறினார். இந்த நிலையில் 2024 ரஞ்சி கோப்பையில் அவர் 7 இன்னிங்ஸில் 365* ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement