
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியானது இன்று ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அந்த மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் வரும் வாய்ப்பு இருப்பதனால் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டுவார்கள்.
அதேவேளையில் சன் ரைசர்ஸ் அணியானது 7 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளதால் அவர்களும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். அதன் காரணமாக அந்த அணியும் வெற்றிக்கான முனைப்பு காட்டும் எனவே இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டி நடைபெறும் ஹைதராபாத் மைதானத்தில் சியர் லீடர்ஸ் நடனம் ஆடக்கூடாது என்றும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி போட்டியில் விளையாடும் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அம்பயர்கள் என அனைவருமே கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : வாழ்க்கை ஒரு வட்டம்.. லக்னோ ஓனருக்கு ஜெர்ஸியை வைத்து ராகுல் கொடுத்த பதிலடியில் இப்படி ஒரு பின்னணியா?
இந்த துக்க விடயத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே இந்த ஒரு முடிவை பி.சி.சி.ஐ எடுத்துள்ளது. மேலும் இன்றைய போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.