- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட ரோல் மாடல் விராட் கோலியின் கையால் கனவு நிஜமாகும்ன்னு நினைக்கல.. நிதிஷ் பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 67-7 என தடுமாறி வருகிறது. முக்கிய வீரர்களான உஸ்மான் கவாஜா 8, ஸ்மித் 0, டிராவிஸ் ஹெட் 11, மார்ஷ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். களத்தில் அலெக்ஸ் கேரி 19*, மிட்சேல் ஸ்டார்க் 6* ரன்களுடன் உள்ளார்கள்.

- Advertisement -

விராட் கோலியின் கைகளால்:

முன்னதாக இந்தப் போட்டியில் இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஜாம்பவான் விராட் கோலியின் கைகளால் தம்முடைய தொப்பியை வாங்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அவர் முதல் இன்னிங்ஸிலேயே மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது 41 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார். இந்நிலையில் தம்முடைய ரோல் மாடலான விராட் கோலியின் கைகளால் தொப்பியை வாங்கி அறிமுகமானதை மறக்க முடியாது என நிதிஷ் ரெட்டி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது சிறப்பான உணர்வு. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதை நான் எப்போதும் கனவு கண்டேன். அந்தக் கனவு நிஜமான தருணத்தில் அறிமுக தொப்பியை விராட் பாய் கைகளால் வாங்கியது அற்புதமானது. கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கியது முதல் அவர் என்னுடைய ரோல் மாடல்”

- Advertisement -

அசத்திய நிதிஷ்:

“எனவே விராட் கோலி கைதட்டி எனக்கு தொப்பியை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதை நான் தொடர விரும்புகிறேன். ஹர்சித் ராணாவும் நானும் விளையாடப் போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பாகவே அறிந்தோம். அதனால் நாங்கள் கொஞ்சம் பதற்றமாகவும் இருந்தோம். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சி போட்டியில் விளையாடியதைப் போல இங்கேயும் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்”

இதையும் படிங்க: ப்ராட்மேன், சச்சினே விளையாடலாம்.. புஜாரா இல்லாதது பற்றி.. பும்ராவுக்கு ஆலோசனை கொடுத்த கபில் தேவ்

“நேற்று மாலை நாங்கள் சைக்கிளில் பயணம் செய்தோம். அதை அடுத்து இந்தப் போட்டியில் விளையாடினோம். இது எனக்கு கனவு இன்னிங்ஸ் கிடையாது என்றாலும் நல்ல துவக்கம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்க இந்திய அணியினர் போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -