- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிதீஷ் ரெட்டியை எதுக்கு டீமில் எடுத்தீங்க.. சுப்மன் கில் செய்த தவறால் விமர்சிக்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது டெல்லி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

நிதீஷ் ரெட்டியை எதற்காக தேர்வு செய்தீர்கள் : ரசிகர்கள் கேள்வி

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், சுப்மன் கில் 129 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 248 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது.

- Advertisement -

இதனால் பாலோ ஆன் பெற்ற அந்த அணி 270 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் விளையாடி இரண்டாவது இன்னிங்சில் ஓரளவு சுதாரித்து 390 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதனால் மீண்டும் ஒருமுறை இன்னிங்ஸ் தோல்வி அடையும் நிலையில் இருந்து தப்பியது.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. போட்டியின் 4-ம் நாளான இன்று ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழந்து 63 ரன்கள் அடித்துள்ளதால் இந்திய அணி நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ் ரெட்டி இடம் பெற்றும் அவர் இதுவரை முதல் இன்னிங்சிலும் சரி, இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் சரி பந்துவீசாதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த அவர் 54 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 43 ரன்கள் குவித்து அதிரடி காட்டியிருந்தார்.

இதையும் படிங்க : 51 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சம்பவம் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் – இருந்தாலும் வெற்றி உறுதி

அப்படி இருந்தும் முதல் இன்னிங்சின் போது அவர் பந்து வீசவில்லை. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலாவது பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டாவது இன்னிங்சிலும் அவருக்கு சுப்மன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் தேர்வு செய்துவிட்டு அவருக்கு ஒருவர் கூட பந்துவீச வழங்காதது ஏன்? என சுப்மன் கில்லை ரசிகர்கள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -