இலங்கை அணிக்கெதிரான தொடரில் வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் சாதிப்பேன் – இளம்வீரர் பேட்டி

IND

ஜூன் மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணியானது, அங்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப் பயணமானது கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் என்பதால், அதற்கிடையில் இருக்கும் ஜூலை மாதத்தில் இளம் வீரர்களை கொண்ட மற்றொரு இந்திய அணி, இலங்கையுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடும் என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இத்தொடர் நடைபெறும் சமயத்தில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கைக்கு எதிரான தொடரில் பல புதிய வீரர்கள் இந்திய அணிக்கு அறிமுகமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர்களில் கடந்த சில வருடங்களாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ் ராணாவிடம் ஒரு தனியார் இணையதளம் பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டியில் தான் எப்போது வேண்டுமானாலும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படலாம் என்று கூறியுள்ளார் நிதிஷ் ராணா. அவர் அளித்த பேட்டியில்,
என்னுடைய மனதில் நான் நிச்சயமாக இந்திய அணிக்கு தேர்வாவேன் என்றே தோன்றுகிறது. அதற்காக தற்போது என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன்.

- Advertisement -

மேலும் என்னுடைய கடந்தகால ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால், அதில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே நான் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடர்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரிய வரும். எனவே இதனை அடிப்படையாக கொண்டு இந்த இலங்கை தொடரில் அல்லது இதற்கு அடுத்த தொடரிலோ எனக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், கிரிக்கெட்டுக்காகவும் என்னுடைய சொந்த வாழ்க்கைக்காவும் மனரீதியாக என்னைப் பலபடுத்திக் கொண்டுள்ளேன். கடந்த 2-3 வருடங்களாக அது தான் என்னை மிகச் சிறப்பாக செயல்பட வைத்திருக்கிறது என்றும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் நான் முத்திரை பதிப்பேன் என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். இதுவரை 67 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள 27 வயதான நிதிஷ் ராணா, ஐபிஎல் தொடர்ஙளில் 1638 ரன்கள் அடித்துள்ளார். கொல்கத்தா அணியில் விளையாடி வரும் இவர், கடந்த சீசன்களில் ஒன்டவுன் ஆர்டரில் விளையாடினார்.

- Advertisement -

Rana

ஆனால் தற்போது நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டு, அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கினார். மேலும் இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகிய இருவரும் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக தேர்வாவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களுடன் பெங்களூர் அணியின் பேட்ஸ்மேனான தேத்வத் படிக்கல் மற்றும் நிதிஷ் ராணாவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக தேர்வாவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

Advertisement