600 ரன்கள் அடிச்சு அடுத்த வருசம் கம்பேக் கொடுப்பேன் – இந்திய அணிக்கு விளையாட இளம் வீரரின் நம்பிக்கை சப்தம்

IND
- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் சர்வதேச அளவில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுகிறார்கள். ஆனால் இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் ரஞ்சி கோப்பையலேயே ஒரே நேரத்தில் 38 அணிகள் விளையாடுவதால் தேசத்துக்காக விளையாடும் வெறும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பது உண்மையாகவே ஒரு வீரருக்கு கடும் சவாலான காரியமாகும். அதிலும் இந்திய அணியில் சமீப காலங்களில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் கூட ஒரு போட்டியில் காயமடைந்து வெளியேறினால் அடுத்த முறை அணிக்குள் நுழையும்போது இடம் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு கடுமையான போட்டி நிலவும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் வருடக்கணக்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

Dhawan

- Advertisement -

அப்படி கடினமாக உழைத்து தேர்வுக் குழுவை கவர்ந்து தேசத்துக்காக விளையாடும் வாய்ப்பில் அறிமுக போட்டியிலேயே அசத்திய எத்தனையோ வீரர்கள் அதன்பின் வாய்ப்பு கிடைக்காமல் காணாமல் போயுள்ளனர். காலமும் நேரமும் அதிர்ஷ்டமும் அதில் முக்கிய பங்காற்றும் நிலையில் பெரும்பாலான வீரர்களுக்கு ஆரம்ப கட்ட ஒருசில போட்டிகளில் தடுமாறினாலும் குறிப்பிட்ட அளவு வாய்ப்பை அணி நிர்வாகம் நிச்சயமாக வழங்கும். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டு பொன்னாக மாற்றினால்தான் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விளையாட முடியும். இல்லையேல் குறிப்பிட்ட அளவு போட்டிகளுக்கு பின் அதிரடியாக நீக்கப்படும் வீரர்கள் இந்திய அணியை விட்டு தூரமாக சென்று 2வது வாய்ப்பை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.

தவறவிட்ட நிதிஷ்:
அந்த நிலைமையில்தான் டெல்லியைச் சேர்ந்த 28 வயது இளம் வீரரான நிதிஷ் ராணா உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் 2011 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில் 2016 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். குறிப்பாக கொல்கத்தா அணியில் அதிரடியான ரன்களை குவித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற இவர் 91 ஐபிஎல் போட்டிகளில் 2181 ரன்களை 134.22 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து திறமையான இளம் வீரராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

rana 1

அதனால் கடந்த 2021 ஜூலையில் இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணியில் இடம் பிடித்த இவர் 3வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 7வது இடத்தில் களமிறங்கி வெறும் 7 ரன்களில் அவுட்டானார். அதன் பின் நடந்த டி20 தொடரில் 2 போட்டிகளில் 5ஆவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற இவர் வெறும் 15 ரன்களை 55.56 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்ததால் அதோடு கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

600 ரன்கள்:
இருப்பினும் ஐபிஎல் தொடரில் பொதுவாக 3வது இடம் போன்ற டாப் ஆர்டரில் விளையாடும் இவர் ஒருவேளை இந்தியாவுக்காக மேல் வரிசையில் விளையாடியிருந்தால் நல்ல ரன்கள் அடித்திருப்பார் என்று கூறுவதில் தவறில்லை. ஆனால் ஐபிஎல் தொடரிலும் டாப் ஆர்டரில் தொடர்ச்சியாக பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறும் அவர் 2017 முதல் 2022 வரை 333, 304, 344, 352, 383, 361 என தொடர்ச்சியாக கணிசமான ரன்களை எடுத்தாலும் ஒருமுறைகூட 400 ரன்களையும் 150 ஸ்ட்ரைக் ரேட்டையும் தாண்டியதில்லை. இதுவே இந்திய அணியில் தொடர்ச்சியாக இவருக்கு வாய்ப்பு கொடுக்க தேர்வுக்குழு தயங்குவதற்கு ஒரு காரணமாகிறது.

Nitish-Rana

இந்நிலையில் அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 600க்கும் ரன்களைக் குவித்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்து இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நிதிஸ் ராணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கிரிக்கெட் வீரராக நான் எப்போதும் சர்வதேச அளவில் விளையாடுவதற்கான வாய்ப்பை விரும்புகிறேன். முதல் முறையாக (இலங்கைக்கு எதிராக) விளையாடியபோது நான் களமிறங்கிய இடம் எனக்கு சவுகரியமாக அமையவில்லை. ஆனால் அதற்காக அதை ஒரு சாக்காக சொல்ல நான் விரும்பவில்லை”

“எனவே அடுத்து வரும் ஐபிஎல் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவிப்பேன் என்று நம்புகிறேன். அப்போதுதான் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்க்க முடியும். நிறைய ரன்களை அடித்து என்னுடைய ஆட்டத்தில் முன்னேறுவது மட்டுமே என்னுடைய கையில் உள்ளது. அந்த வகையில் வரும் சீசனில் நான் அதிக ரன்கள் அடிப்பேன் என்று நம்புகிறேன். ஒருவேளை நான் 400 ரன்களை அடித்த பின்பும் என்னை யாரும் தேர்வு செய்யவில்லையெனில் அடுத்ததாக 600 ரன்கள் அடிக்க வேண்டியதே என்னுடைய வேலையாகும்” என்று கூறினார்.

Advertisement