லண்டன் மருத்துவமனைக்கு சென்று பாண்டியாவை முதலில் சந்தித்த கோடீஸ்வரர் யார் தெரியுமா ? – புகைப்படம் இதோ

Pandya
- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு பாண்டியா எழுந்து சிறிது தூரம் நடக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை கண்ட இந்திய ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும், பிராத்தனைகளையும் தெரிவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை முடிந்து இருக்கும் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான நீதா அம்பானி நேரில் சென்று பாண்டியாவை சந்தித்துள்ளார். நீதா அம்பானியின் இந்த சந்திப்பை பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில் நீங்கள் லண்டனுக்கு நேரில் வந்து என்னை பார்த்ததற்கு மிகவும் நன்றி பாபி(அண்ணி) உங்களுடைய வாழ்த்துக்களும் ஊக்கமும் என்னை எப்போதுமே பலப்படுத்தும் மேலும் எப்போதுமே மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரிதான் என்று பாண்டியா அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டு அதனை பகிர்ந்துள்ளார்.

Advertisement