அவங்களை அடிக்க நான் என்ன ஹர்மன்ப்ரீத்தா? இந்திய கேப்டனை வம்பிழுத்த வங்கதேச கேப்டன்.. நடந்தது என்ன?

Nigar Sulthana
- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. அந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது புதிய சரித்திரம் படைத்தது. அதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சரித்திர சாதனையை ஹர்மன்ப்ரீத் கௌர் படைத்தார்.

மறுபுறம் வங்கதேச அணி வழக்கம் போல தடுமாற்றமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வென்ற வங்கதேசம் ஏனையப் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. அந்த நிலைமையில் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி தங்களுடைய சொந்த அணியின் வீராங்கனைகளையே அடிப்பதாக வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஜகாரனா ஆலம் குற்றம் சாட்டினார்.

- Advertisement -

நான் என்ன ஹர்மன்ப்ரீத்தா:

பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் ஜூனியர் வீரர்கள் சுமாராக விளையாடும் போது கோபத்தில் திட்டுவது வழக்கமாகும். ஆனால் தங்களுடைய கேப்டன் நிகர் சுல்தானா மட்டும் கோபப்பட்டால் பேட்டால் அடிப்பதாக ஆலம் வேதனையுடன் தெரிவித்தார். இந்த உண்மையை வெளியே சொன்னால் அணியிலிருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதால் பெரும்பாலான வங்கதேச வீராங்கனைகள் யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்த செய்தி வங்கதேச ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. இந்நிலையில் அது பற்றி கேட்ட போது வீராங்கனைகளை அடிப்பதற்கு நான் என்ன ஹர்மன்ப்ரீத் கௌரா? என்று வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா சம்பந்தமின்றி பதிலளித்துள்ளார். அதாவது 2023ஆம் ஆண்டு வங்கதேசத்தில் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரில் விளையாடியது.

- Advertisement -

வம்பிழுக்கும் வங்கதேச கேப்டன்:

அப்போது ஒரு போட்டியில் அவுட்டான ஹர்மன்ப்ரீத் பெவிலியன் நோக்கி செல்லும் போது பேட்டால் ஸ்டம்ப் மேலே அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். அப்படி ஸ்டம்ப் போல வீராங்கனைகளை அடிக்க தாம் என்ன ஹர்மன்ப்ரீத்தா என்று சம்பந்தமின்றி பதிலளித்துள்ள சுல்தானா இந்திய கேப்டனை வம்பிழுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஏன் யாரையாவது அடிக்க வேண்டும்?”

இதையும் படிங்க: 3 நாளில் முடிஞ்சா பேய் இருக்குன்னு தானே அர்த்தம்.. அதை ஓட்டுற வழியைப் பாருங்க.. கம்பீருக்கு ஸ்டைன் பதிலடி

“நான் ஏன் என்னுடைய பேட்டை வைத்து ஸ்டம்பை அடிக்க வேண்டும்? ஸ்டம்ப்பை அடிப்பதற்கு நான் ஹர்மன்ப்ரீத்தா? என்னுடைய சொந்த இடத்தில் நான் சமைக்கும் போது அல்லது ஏதேனும் செய்யும் போது என்னுடைய பேட்டால் ஹெல்மெட்டில் அடித்தால் அது என்னுடைய விருப்பம். ஆனால் அதையே நான் ஏன் மற்றவரிடம் உடல்ரீதியாக செய்ய வேண்டும்? அப்படி நான் செய்வேனா என்பது பற்றி மற்ற வீராங்கனைகளிடம் கேட்டுப் பாருங்கள். நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது” என்று கூறினார்.

Advertisement