3 ஆவது இடத்தில் களமிறங்கி வெறியாட்டம் ஆடிய நிக்கோலஸ் பூரான்.. கலங்கி நின்ற ஆப்கானிஸ்தான் அணி

Pooran
- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டிகளின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது இன்று மோதி வருகின்றனர். அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய பிரெண்டன் கிங் 7 ரன்களில் வெளியேற மூன்றாவது வீரராக களம் புகுந்த நிக்கோலஸ் பூரான் அதிரடியில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அதோடு அவருடன் விளையாடிய அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பினை சிறப்பாக வழங்க நிக்கோலஸ் பூரான் ஒருபுறம் இறுதிவரை விளையாடினார். அதன்படி இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது.

பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களை மட்டுமே குவித்தது. இதன்காரணமாக 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரானின் ஆட்டத்தை பார்த்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் கதி கலங்கிவிட்டனர் என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியில் 53 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் என 98 ரன்கள் குவித்து பயம் காட்டினார்.

இதையும் படிங்க : கவுதம் கம்பீருடம் இணையும் ஜாம்பவான்.. இந்திய அணிக்காக இணைய இருக்கும் பிரமாண்டம் – விவரம் இதோ

ஒரு கட்டத்தில் கடைசி ஓவரின் போது அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பாராவிதமாக ரன் அவுட்டாகி அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் பூரான் இந்த உலககோப்பை தொடரிலும் அசத்தி வருவது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது.

Advertisement