2 முறை ஆர்சிபி’யை மிஞ்சிய உகாண்டா.. மனதை தொட்ட வில்லியம்சன்.. நியூஸிலாந்து ஆறுதலுடன் சாதனை வெற்றி

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 15ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நான் 32வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய உகாண்டா எதிர்பார்த்தது போலவே நியூசிலாந்திடம் திண்டாடியது.

அந்த அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த வகையில் சீரான விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 18.4 ஓவரில் 40 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு 10 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டாத நிலையில் அதிகபட்சமாக வைஸ்வா 11 ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையை உகாண்டா படைத்தது.

- Advertisement -

மோசமான சாதனை:
சொல்லப்போனால் இதே தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ரன்களுக்கு சுருண்ட உகாண்டா டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த என்ற மோசமான உலக சாதனையை படைத்திருந்தது. அந்த வகையில் ஒரே உலகக் கோப்பையின் டாப் 2 குறைந்தபட்ச ஸ்கோர்களை பதிவு செய்து உகாண்டா மோசமான சாதனை படைத்துள்ளது.

அதனால் ஐபிஎல் தொடரில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான படைத்த ஆர்சிபி அணியை விட உகாண்டா படுமோசமாக செயல்பட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டிம் சவுதி 3, ட்ரெண்ட் போல்ட் 2, மிட்சேல் சான்ட்னர் 2, ரச்சின் ரவீந்தரா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 41 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 22* (15), பின் ஆலன் 9 ரன்கள் அடித்து 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அதனால் 88 பந்துகள் மீதம் வைத்து வென்ற நியூசிலாந்து டி20 உலகக் கோப்பையிலும் டி20 கிரிக்கெட்டிலும் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக 74 பந்துகள் மீதம் வைத்து வென்றதே நியூசிலாந்தின் முந்தைய பெரிய வெற்றியாகும்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணி வெளியேற வேண்டும் என்பதற்காக ஒன்னும் நாங்க அப்படி விளையாட மாட்டோம் – கம்மின்ஸ் கொடுத்த விளக்கம்

அந்த வகையில் ஏற்கனவே இந்த தொடரிலிருந்து வெளியேறிய நியூசிலாந்து இப்போட்டியில் சாதனையுடன் ஆறுதல் வெற்றி பெற்றது. மேலும். போட்டி முடிந்ததும் கத்துக்குட்டியாக கருதப்படும் உகாண்டா அணி வீரர்கள் நியூசிலாந்தின் நட்சத்திரம் கேன் வில்லியம்சனிடம் சில ஆலோசனைகளை கேட்டனர். அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை கொடுத்த வில்லியம்சன் ஜெர்ஸயையும் பரிசாக கொடுத்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டார்.

Advertisement