நடந்து முடிந்த 19வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் உலகக்கோப்பை பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி.19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இளம் வீரர்களின் அபாரத்திறமை மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றிற்கு கைமேல் பலன் கிடைத்தது.
எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து உலகக்கோப்பையை வென்று வாகை சூடியது இந்திய அணி.இந்த வெற்றிக்கான காரணங்களில் ராகுல் டிராவிட்டின் பங்கும் மிகப்பெரியது. அணி வீரர்களை தேர்வு செய்தது முதல் உலகக்கோப்பையை வெல்லும் நொடிவரை ராகுல் டிராவிட் அணியை மிகநேர்த்தியாக வழிநடத்திச் சென்றார்.
உலகக்கோப்பையை வென்ற இளம் வீரர்களை பலரும் பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய அணிக்கு புதிய யுவராஜ்சிங் கிடைத்துளதாக இளம் வீரரான மனோஜ் கல்ராவை குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.
இடதுகை ஆட்டக்காரரனா மனோஜ் கல்ரா உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற வீரர்களில் ஒருவர்.ஆகாஷ் சோப்ரா தனது டிவீட்டில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மனோஜ் கல்ரா இந்தியர்களின் மனதில் இடம்பிடிக்கும் வகையில் விளையாடினார். மனோஜ் கல்ரா இந்திய அணியின் மற்றொரு யுவராஜ்சிங்காக எனக்கு தெரிகின்றார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
The young man who reminded us of Yuvraj Singh #AakashVani talking about Manjot Kalra…. pic.twitter.com/ehFuORJNi6
— Aakash Chopra (@cricketaakash) March 10, 2018