இப்படி ஒரு டாமினேட் செய்யும் பிளேயர் இந்தியாவுக்கு கிடைப்பார்ன்னு நினைக்கவே இல்ல.. சாஸ்திரி பாராட்டு

Ravi Shastri 3
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த வெற்றிகளுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். ஏனெனில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதனால் அந்த 2 போட்டிகளிலும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் 2 ஆட்டநாயக்கன் விருதுகளை வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றைப் படைத்தார். குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்திய அணிக்கு துல்லியமாக பந்து வீசிய அவர் 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:
இது போக சமீபத்திய வருடங்களாகவே அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான ஆக்சனை வைத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதனால் தற்சமயத்தில் பும்ரா உலகின் சிறந்த பவுலராக இருப்பதாக ஜாம்பவான் வாசிம் அகரம் பாராட்டியுருந்தார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பவுலர் இந்தியாவுக்கு கிடைப்பார் என்று எப்போதும் நினைத்ததில்லை என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பும்ரா வருவதற்கு முன்பு வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் டாமினேட் செய்யும் அளவுக்கு இந்தியாவிடம் வேகப்பந்து வீச்சாளர் இல்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெள்ளைப்பந்து, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆட்சி செய்வார் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை”

- Advertisement -

“ஆனால் பும்ரா அதை செய்துள்ளார். ஏனெனில் அவருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அரிதாகவே அதிரடியாக விளையாடுகின்றனர். எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது அவருக்கு தெரிகிறது. பும்ரா தற்சமயத்தில் மிகவும் சிறந்தவராக உள்ளார்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் கிளன் மெக்ராத், லசித் மலிங்கா போல இந்தியாவுக்கு ஜஸ்ப்ரித் பும்ரா கிடைத்துள்ளதாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மொத்தமா 100 அடிக்கவே கஷ்டப்படுறாங்க.. ஆனா விராட் கோலி அதை செய்வாருன்னு சாத்தியம் பண்றேன்.. டிகே ஆதரவு

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் மகத்தானவர். நாம் கிளன் மெக்ராத், லசித் மலிங்கா ஆகியோர் டாமினேட் செய்வதை பார்த்துள்ளோம். பும்ராவும் அதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்” என்று கூறினார். அந்த வகையில் காயங்களை கடந்து அசத்தி வரும் பும்ரா இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement