2023 உ.கோ குவாலிபயர் : வெறும் 10% நூலிழை வாய்ப்பில் மாஸ் காட்டிய நெதர்லாந்து – ஸ்காட்லாந்தை வீழ்த்தியது எப்படி?

NED vs SCo
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் தொடரை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட டாப் 8  கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே சூப்பர் லீக் சுற்றின் வாயிலாக நேரடியாக தேர்வான நிலையில் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் பி பிரிவில் இடம் பிடித்திருந்த 1996 சாம்பியன் இலங்கை லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காததை போலவே சூப்பர் 6 சுற்றிலும் தொடர் வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

ஆனால் குரூப் ஏ பிரிவில் தான் ஆரம்பம் முதலே ஏராளமான ஆச்சரியங்கள் அரங்கேறி வந்தன. குறிப்பாக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து 4 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்ற ஜிம்பாப்வே முதல் அணியாக சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் தட்டு தடுமாறி வந்த வெஸ்ட் இண்டீஸை 374 ரன்களை சேசிங் செய்து சூப்பர் ஓவரில் தோற்கடித்த நெதர்லாந்து 3வது அணியாக தகுதி பெற்றது. அந்த நிலைமையில் நடைபெற்ற சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

மெகா கிளைமேக்ஸ்:
குறிப்பாக 1975, 1979 சாம்பியன் பட்டங்களை வென்ற அந்த அணி முதல் முறையாக உலக கோப்பையிலிருந்து வெளியேறியது மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதை விட 2வது அணியாக தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜிம்பாப்வே முக்கிய நேரத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது. அந்த நிலையில் 10வது அணியை தீர்மானிப்பதற்காக ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற கடைசி சூப்பர் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

அதில் ஜிம்பாப்வேயை தோற்கடித்த காரணத்தால் சூப்பர் 6 புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 2வது இடத்திலிருந்த ஸ்காட்லாந்து மோசமாக தோற்காமல் இருந்தாலே ஃபைனலுக்கு 90% தகுதி பெறலாம் என்ற பிரகாச நிலையில் களமிறங்கியது. மறுபுறம் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்த காரணத்தால் நெதர்லாந்தின் வெற்றிக்கு 10% மட்டுமே வாய்ப்பிருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் போராடி 277/9 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அதிகபட்சமாக ப்ரண்டன் மெக்முலன் சதமடித்து 106 (110) ரன்களும் கேப்டன் பேரிங்டன் 64 ரன்களும் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து 278 ரன்களை துரத்திய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் அய்ங்க 40, மேக்ஸ் ஓ’தாவுத் 20, பரேசி 11 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு நல்ல ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அதை வீணடிக்காத வகையில் 4வது இடத்தில் களமிறங்கிய பஸ் டீ லீடி பவுலிங் போலவே பேட்டிங்கிலும் ஸ்காட்லாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறி நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டார்.

அந்த நிலையில் நிதமனரு 10 ரன்னில் அவுட்டானாலும் 6வது விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய லீடி 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் அதிரடியாக சதமடித்து 123 (92) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருடன் கேப்டன் எட்வர்ட்ஸ் 25, ஜூல்பிகர் 33* (32) ரன்களும் எடுத்த உதவியுடன் 42.5 ஓவரிலேயே 278/6 ரன்கள் எடுத்த நெதர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ஸ்காட்லாந்து சார்பில் லீஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

அதை விட நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 ஓவர்கள் மீதம் வைத்து வென்ற காரணத்தால் ரன் ரேட் அடிப்படையில் (0.102) ஸ்காட்லாந்தை 3வது இடத்திற்கு தள்ளிய நெதர்லாந்து நூலிழையில் (0.160) புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு இலங்கையை தொடர்ந்து 10வது அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : திலக் வர்மாவை விட இந்த பையன் ரொம்ப டேலண்ட் அவனை செலக்ட் பண்ணாம தப்பு பண்ணிட்டாங்க – ஆகாஷ் சோப்ரா கருத்து

அந்த வகையில் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த ஜிம்பாப்வேவை சாய்த்த ஸ்காட்லாந்தை கடைசி நேரத்தில் தோற்கடித்த நெதர்லாந்து அனைவரையும் வியக்க வைத்து உலக கோப்பைக்கு தகுதி பெற்ற ஜூலை 9இல் நடைபெறும் இத்தொடரின் ஃபைனலுக்கும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

Advertisement