2014 ஆக்லாந்து டெஸ்டில் தோனி தில்லா அடிச்சுரு.. விராட் கோலியை ஈஸியா தூக்கிட்டேன்.. நெய்ல் வாக்னர்

Neil Wagner
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். 2011 முதல் கடந்த ஜனவரி வரை விளையாடிய அவர் 9230 ரன்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவருக்கு முன் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்திருந்த எம்எஸ் தோனி 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய அவர் இப்போதும் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் 2014 ஆக்லாந்து டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை பவுன்சர்களை போட்டு எளிதாக அவுட்டாக்கியதாக நியூஸிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே பந்துகளை ஜடேஜாவுடன் சேர்ந்து தோனி பயமின்றி எதிர்கொண்டதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பவுன்சர்க்கு அசாராத தோனி:

இது பற்றி ரெட் இன்கர் எனும் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டியில் பிட்ச் ஃபிளாட்டாக இருந்த போதிலும் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றிற்கு சாதகமாக இருந்தது. ஆக்லாந்து மைதானம் நேராக சிறியதாக இருந்தாலும், பக்கவாட்டில் பெரிதாக இருப்பது உதவிகரமாக இருக்கும். அங்கே இந்தியா எப்படி விளையாடினார்கள் எனக்கு நினைவிருக்கிறது”

“குறிப்பாக விராட் கோலி கொஞ்சம் செட்டிலாகாமல் தடுமாறினார். அதை அடிக்கலாமா வேண்டாமா அல்லது எப்படி அடிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. எனவே கண் பார்வையிலிருந்து அவரை குறுக்கே வர வைப்பதே எங்களுடைய ஐடியா. அதே போல ஸ்கொயர் பகுதிக்கு முன் ஃபுல் அடிக்க முயற்சித்த அவர் எட்ஜ் கொடுத்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்தது எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது”

- Advertisement -

இந்தியா தோல்வி:

“பின்னர் தோனி மற்றும் ஜடேஜா அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இலக்கை சேசிங் செய்வது போல் பேட்டிங் செய்தனர். குறிப்பாக தோனி அந்த பந்துகள் தம்மை தொந்தரவு செய்யாதது போல் விளையாடினார். அதனால் நாங்கள் பயமின்றி நேர்மறையான ஆக்ரோஷமான ஆப்ஷனை எடுக்க வேண்டியிருந்தது. தோனிக்கு எதிராக நான் ஸ்லோயர் பந்தை வீச முடிவெடுத்தேன்”

இதையும் படிங்க: வெறும் 1 போட்டியில் விளையாடியுள்ள ஹர்ஷித் ராணா ஆசிய கோப்பை தொடரில் இடம்பிடிக்க – காரணம் இதுதானாம்

“அதை அடித்த தோனி பேட்டில் பட்ட பந்து ஸ்டம்பில் அடித்தது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதனால் எனக்கு அதிகப்படியான தன்னம்பிக்கை கிடைத்தது” என்று கூறினார். அப்போட்டியில் 407 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தவான் 115, கோலி 67, தோனி 39, ஜடேஜா 26 ரன்கள் எடுத்துப் போராடினார்கள். ஆனால் முரளி விஜய், புஜாரா, ரஹானே, ரோஹித் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காததால் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement