ப்ரித்வி ஷாவும் வேணாம். சுப்மன் கில்லும் வேணாம். டெஸ்ட் ஓப்பனாரா இவரே இறங்கட்டும் – நெஹ்ரா தேர்வு

Nehra-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்துவிட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ள இந்த முதல் போட்டியில் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்ததால் இம்முறை இந்திய அணி பழிதீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி விளையாடும் என்று தெரிகிறது.

INDvsAUS

- Advertisement -

மொத்தமாக பார்த்தால் இந்த தொடர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றே கூறலாம் மேலும் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யார் இடம் பெறுவார்கள் என்ற ஒரு பேச்சு வார்த்தையும் தொடர்ந்து வருகிறது. அதில் மாயங்க் அகர்வால் உறுதியான துவக்க வீரராக விளையாடுவார்.

அவருக்கு துணையாக கில் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் துவக்க வீரர் போட்டியில் உள்ளனர். இதில் ஏற்கனவே ப்ரித்வி ஷா துவக்க வீரராக விளையாடியவர். ஆனால் கில் மிடில் ஆர்டரில் விளையாடியவர். தற்போது இவர்கள் இருவருமே இந்திய தொடக்க வீரர்களாக இருக்க வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Rahul

நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் மயங்க் அகர்வால் உடன் யார் துவக்க வீரராக களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது. இது இந்திய அணிக்கு பலமான விடயம் கிடையாது ஆனாலும் இந்த விஷயத்தில் சற்று கவலை உள்ள விஷயமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கில் மற்றும் ப்ரித்வி ஷாவை இருவரை காட்டும் போது ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என நினைக்கிறேன்.

Rahul

தற்போது அவர் இருக்கும் ஃபார்மில் ரன்கள் அடித்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு பலமாக மாறும் அவர்தான் கண்டிப்பாக ஓபனராக இருக்க வேண்டும் எனவும் ஆசிஸ் நெஹரா தெரிவித்துள்ளார். ராகுல் இந்திய அணிக்காக ஏற்கனவே தவானுடன் இணைந்து துவக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி அதிகபட்சமாக 199 ரன்களையும் அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement