ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துவிட்டது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்து விட்டது. அதனை தாண்டி கடைசியாக இந்திய அணி விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து அணியில் பல பிரச்சனைகளில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
பல இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்காதது, ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்களின் காயத்தில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லாதது என பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்நிலையில் விராட் கோலி வீடியோ மூலம் பத்திரிக்கையாளர்களை சமீபத்தில் சந்தித்து ஒரு சில செய்திகளை கூறினார். மேலும் அந்த சந்திப்பில்… ரோகித் சர்மாவின் காயத்தை பற்றி தனக்கு சரியாக தெரியவில்லை.
என்றும் அது குறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் இல்லை என்றும் கூறியிருந்தார். மேலும் அணி தேர்வு குறித்து தன்னிடம் எதுவுமே சொல்லப்படவில்லை என்றும் அணியில் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று ஒரே ஒரு மெயில் மட்டுமே தனக்கு வந்ததாகவும் கூறினார். அதனால் அணி தேர்வில் உள்ள தொடர்பு எனக்கு முற்றிலுமாக தெரியவில்லை.
இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹரா கூறுகையில் : விராட் கோலி கூறியதை பார்த்து நான் ஏமாற்றம் அடைந்து விட்டேன். இது எனக்கு சற்றும் புரியவில்லை. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இது குறித்து கண்டிப்பாக பேசியிருக்க வேண்டும். மேலும், அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி ரோஹித் சர்மாவிடம் சென்று விசாரித்து இருக்க வேண்டும்.
இது உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் ரோகித் சர்மாவும் விராட் கோலியுடன் பேசியிருக்க வேண்டும். இந்த நவீன காலகட்டத்தில் தகவல் தொடர்பிற்கு பஞ்சம் ஏது ? அப்படி இருக்கையில் இப்படிப்பட்ட நிலைமை ஏன் ? இதில் வெளிப்படைத்தன்மை இல்லை ஒரு கேப்டன் இப்படிப்பட்ட பதிலளிப்பது தனக்கு ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஆஷிஸ் நெஹ்ரா.