தோனி பிட்டாதான் இருக்காரு. ஆனாலும் அவருக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கு – நெஹ்ரா வெளிப்படை

Nehra
- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆனார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவு! எளிதான போட்டி இல்லை என்றாலும், ஆனால் தோனியின் ரன் அவுட்டால் வேறு வழியின்றி இந்தியா தொடரை விட்டு வெளியேறியது. பின்னர் தோனியும் வெளியேறிவிட்டார்.

Dhoni

- Advertisement -

கிரிக்கெட்டிலிருந்து குறுகிய கால ஓய்வு எடுத்துக் கொண்டதை அடுத்து, வரும் தொடர்களுக்கு இந்திய அணியில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். இப்படியே இருக்க அவரது ஒப்பந்தத்தையும் பிசிசிஐ துண்டித்தது. இந்நிலையில் அவர் ஓய்வு பெற்று விடலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். சேவாக், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது

தற்போது ஆசிஸ் நெஹரா இதே விஷயத்தைத்தான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மீண்டும் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்றால் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். என்னை பொருத்தவரை அவர் இன்னும் ஒரு நல்ல விக்கெட் கீப்பராக, உடல் தகுதியுடன் இருக்கிறார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்.

nehraa

அவரைப் பற்றி தெரிந்த வகையில், அவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வருடம் ஆடிய வகையில், அவர் குறித்து கூறுகிறேன், தோனியிடம் இருந்து எப்போதும் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்.அவர் இன்னும் தனது ஓய்வினை அறிவிக்கவில்லை. தற்போதைய சூழலை பார்த்தால் இந்திய அணிக்குள் அவர் மீண்டும் வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்று கூறியுள்ளார்.

ஆசிஸ் நெஹரா கடந்த 2016 முதல் 18 ஆம் ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் மேலும் இந்திய அணியிலும் தோனியின் தலைமையில் தனது பல போட்டிகளை அவர் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தோனிக்கு ஆதராகவாக பேசும் குறிப்பிட்ட வீரர்கள் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement