தினேஷ் கார்த்திக் மற்றும் பார்திவ் பட்டேல் ஆகியோரை ஓரங்கட்டி தோனி ஜெயிக்க இதுவே காரணம் – ஆஷிஷ் நெஹ்ரா பேட்டி

Nehra
- Advertisement -

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தோனி இடம் பிடித்தது மிகச்சிறிய காரியம் இல்லை. அதற்காக தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் போன்ற பல வீரர்களுடன் போட்டியிட்டு தனது இடத்தை தக்க வைத்தார். மேலும் அவருக்கு முன்னர் விக்கெட் கீப்பராக இருந்தவர்களும் சாதாரண வீரர்கள் கிடையாது. அதற்குப் பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு சொல்லும்.

Karthik

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக அறிமுகமானார் தோனி. அப்போது அவர் சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கவில்லை. சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் கடுமையாக சொதப்பினார். அதன் பின்னர் 6வது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கங்குலி ஒரு சிறப்பான முடிவை எடுத்தார். தோனியை முன்னரே களமிறஙக்கினார்.

- Advertisement -

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தோனி 148 ரன்கள் விளாசினார். அதன் பின்னர் அவரது ஆட்டம் வெர்லெவலுக்கு மாறியது. ஆனால் இதைவிட அப்போதிருந்த பார்த்தீவ் பட்டேல் பேட்டிங்கிலும், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கினர். அவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இந்திய கேப்டனாகவும் மாறினார் தோனி.

patel

இதுகுறித்து பேசியுள்ள ஆசிஸ் நெஹரா கூறியதாவது : தோனிக்கு தன் துவக்க போட்டிகளில் நேரம் சிறப்பாக இருக்கவில்லை. ஆனால் ஒரு மன உறுதியான வீரருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை தடுத்து விட முடியாது, அதுதான் நடந்தது. அசைக்கமுடியாத நம்பிக்கை மட்டுமே தோனியின் பலம். அவர் ஆடிய சில ருத்ர தாண்டவ ஆட்டங்கள் தான் அந்த நம்பிக்கையை நிரூபித்தது. தினேஷ் கார்த்திக் மற்றும் பர்த்திவ் படேல் ஆகிய இருவரும் செய்யாத விஷயத்தை தோனி செய்தார்.

- Advertisement -

தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முடிந்தவரை பயன்படுத்திக்கொண்டார் தோனி. பார்ப்பதற்கு சிறந்த பேட்ஸ்மேன் இல்லை, சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கவில்லை. ஆனால், தற்போது அவர் தான் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தோனி தனது இடத்தை தக்கவைத்து கொண்டு ஆட்சி புரிந்து வருகிறார் என்று கூறியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.

dhoni

தோனி அணியில் இணைந்த பிறகு இப்போது வரை 15 ஆண்டுகளாக தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இன்றுவரை ஓய்வை அறிவிக்காத தோனி இன்னும் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராகவே திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement