நீங்க எடுக்குற முடிவால இந்திய அணி பாதிப்படையும். கோலி மற்றும் ரவி சாஸ்திரியை விட்டு விளாசிய – நெஹ்ரா

Ravi
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றாலும், ஐ.சி.சி நடத்தும் முக்கிய தொடர்களில் தோல்வியை தழுவுவதாலும், அணி வீரர்களின் தேர்வில் தலையிடுவதாலும் அவ்வப்போது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகின்றனர். அதுமட்டுமின்றி ரவி சாஸ்திரி கோலிக்காக ஒருசார்பாக நடந்துகொள்கிறாரோ என்ற கேள்விகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

Ravi

அதுமட்டுமின்றி கோலியும் ரவி சாஸ்திரியும் இணைந்து வீரர்களை தேர்வு செய்வதில் ஒருமனதாக தேர்வு செய்வதாகவும் அவர்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோலி, ரவி சாஸ்திரி மற்றும் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் இந்திய அணியின் தேர்வினை செய்கின்றனர். இதில் தலைமை தேர்வாளராக பிரசாத் பொறுப்பேற்றது முதல் அணியில் உள்ள திறமையான சில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

- Advertisement -

சில வீரர்களை அணியில் எடுப்பதும், மீண்டும் அவர்கள் நீக்குவதும் என இருந்தது. அதுமட்டுமின்றி ஓரிரு போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவரை அணியில் இருந்து முற்றிலும் நீக்குவதுமாக இருந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு முன்னரும் இந்த சர்ச்சை எழுந்தது. ஏனெனில் உலக கோப்பை இந்திய அணிக்கு 4-வது வீரருக்கான தேடல் பல மாதங்கள் நடைபெற்றது.

Rayudu

இறுதியில் ராயுடு அதற்குத் தகுதியானவர் அவரே அந்த இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அனுபவம் குறைந்த விஜய் சங்கர் அணிக்கு தேர்வானார் இந்த விடயம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தேர்வு குறித்த தனது அதிர்ப்தியினை ராயுடு நேரடியாக வெளிக்காட்டினார். உலகக்கோப்பை முடிந்த பின்னரும் நான்காவது வீரர் குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருந்தது.

- Advertisement -

அதன் பிறகு உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு மீண்டும் நான்காவது வீரராக யார் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தினை கெட்டிமாக பிடித்துக்கொண்டார். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே என பல வீரர்களை இந்திய அணி சோதித்தது ஆனால் தற்போதுதான் உறுதியான ஐயர் அந்த இடத்தில் அணிக்காக விளையாடி வருகிறார். இதே போன்று சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு தருவதும் பின்னர் அவர்களும் அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது.

Iyer-1

இந்நிலையில் இந்த இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்பாடு குறித்து விமர்சித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆசிஷ் நெக்ரா இதுகுறித்துக் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளாக சில வீரர்களுக்கு அணியில் நிரந்தர இடம் கிடைப்பதில்லை. சேர்ப்பதும், நீக்கப்படுவதுமாக இருந்து வருகின்றனர். தேர்வு குழுவினரின் இந்த அணுகுமுறை சரியானது கிடையாது. மேலும் குறைவான வீரர்களை மட்டுமே அவர்கள் தேர்வு செய்தனர் அதுமட்டுமின்றி அதிகமானோரை புறக்கணித்துள்ளனர்.

rahul 3

இது இந்திய அணிக்கு நல்லதல்ல தற்போதைய ஈடாக ஒரு கோர் டீமை வலுவாக நாம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அப்பொழுதுதான் தொடர்ச்சியாக சிறப்பான வீரர்கள் நீடித்துக் கொண்டே இருப்பார்கள். இன்றுவரை என்னை பொறுத்தவரை 5 மற்றும் 6ஆம் இடங்களில் இறங்கும் வீரர்கள் யார் என்பது உறுதியாகவில்லை. ராகுல் தொடக்க வீரராகவும், 4,5 ஆகிய இடங்களுக்கும் அவ்வப்போது மாற்றப்பட்டு வருகிறார். மேலும் தோனிக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட பண்ட் தண்ணீர் பாட்டில் கொண்டு வருகிறார். இதெல்லாம் சரியல்ல என்று ஆசிஸ் நெஹரா நேரடியாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Advertisement