2003 ஆம் ஆண்டு இம்ரான் கானை விட தமிழக வீரரான இவர் பாகிஸ்தானில் பிரபலம் அடைந்தார் – நெஹ்ரா வெளியிட்ட தகவல்

Nehra-2
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக 2003ஆம் ஆண்டு நடந்த தொடரில் மற்ற இந்திய வீரர்கள் அனைவரையும் விஞ்சி லட்சுமிபதி பாலாஜி தான் ஹீரோவாக இருந்தார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் பாகிஸ்தான் சென்று ஆடிய ஆறு வார காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.

Balaji 1

- Advertisement -

அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் அதிரடி துவக்க வீரரான விரேந்தர் சேவாக் முச்சதம் விளாசினார், டிராவிட் இரட்டை சதம் விளாசினார், இர்பான் பதான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்படி பல சாதனைகள் அங்கு அரங்கேற்றப்பட்டது. அதனால் அந்தத்தொடர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

ஆனால் இவர்கள் அனைவரையும் மீறி லட்சுமிபதி பாலாஜியை பாகிஸ்தான் கொண்டாடியது. அந்த ஒரு குறிப்பிட்ட தொடரில் இம்ரான் கானை விட பாகிஸ்தானில் லட்சுமிபதி பாலாஜி பிரபலமானார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 160 என்ற ஸ்ட்ரைக் ரேட் வீடத்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 36 ரன்கள் அடித்தார். அதில் 2 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து எடுத்தது.

அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளையும், டெஸ்ட் தொடரில் பதானுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக ஆடி பாகிஸ்தானில் பிரபலமானவர் இவர். அவரது ஸ்விங் பந்துவீச்சு அந்த தொடரில் அமர்க்களமாக இருந்தது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள திணறினர்.

- Advertisement -

அந்த தொடரில் உயரமான உடலமைப்பு, துடிப்பான உடல் நகர்வு, துள்ளிக்குதிக்கும் முடி என அவர் செய்த அனைத்தும் பாகிஸ்தான் ரசிகர்களை கவர்ந்தது. அவர் விக்கெட் எடுத்த உடன் செய்யும் செய்கைகளும் அனைவரையும் கவர்ந்தது. இதனை தாண்டி எப்போதுமே சிரித்துக்கொண்டே இருப்பார். இப்படி 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் முழுவதும் பிரபலமானார் லட்சுமிபதி பாலாஜி.

Balaji 1

இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடவில்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்திய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். மேலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாலாஜி தற்போது சென்னை சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பாகிஸ்தான் தொடர் குறித்தான நிகழ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement