மீதியிருக்கும் 4 போட்டிகளில் இவரோட பவுலிங்ல அனல் பறக்கும் – ஆசிஷ் நெஹ்ரா ஓபன்டாக்

Nehra
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியானது ஐந்தாவது நாளில் பெய்த மழை காரணமாக எளிதாக வெற்றி பெற வாய்ப்பிருந்த இந்த போட்டியை இந்திய அணி நழுவ விட்டது. இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

indvseng

- Advertisement -

ஏனெனில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இனிவரும் போட்டிகளிலும் அவரது பந்து வீச்சு அபாரமாக இருக்கும் என்றும் அவர் பார்முக்கு வந்துவிட்டார் என்றும் பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பும்ராவின் பந்துவீச்சை பாராட்டி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் : பும்ரா பார்முக்கு வந்து விட்டார் என்று கூறுவதெல்லாம் தவறு.

ஏனெனில் நான் எப்போதும் அவ்வாறு நினைத்ததில்லை. அவர் எப்போதுமே சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்த பயோபபுள் வளையயத்தில் கடும் நெருக்கடிகளுக்கு இடையே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இதுபோன்ற சூழ்நிலை வரும். மேலும் அந்த வகையில் பலரும் இந்த நேரத்தில் பந்துவீச்சு ரிதத்தை பிடிக்க சற்று கடினமாக தான் இருக்கும்.

bumrah 2

ஆனால் பும்ரா போன்ற ஒரு வீரர் 2 3 விக்கெட்களை கைப்பற்றி விட்டால் மேலும் சிறப்பாக செயல்பட முடியும். என்னைப் பொறுத்தவரை பும்ராவிடமிருந்து மேலும் சில 5 விக்கெட்டுகளை நாம் பார்க்க முடியும். இந்த தொடரில் அவர் 4 அல்லது 6 முறை இனிவரும் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார். அவர் ஒரு விலை மதிப்பில்லா வீரர் என ஆஷிஸ் நெஹ்ரா புகழாரம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement