இங்கிலாந்து டெஸ்ட் : 3 வேகப்பந்து வீச்சாளர்களாக இவர்களே இடம்பெற வேண்டும் – நெஹ்ரா ஓபன்டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை ஆகஸ்ட் 4ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த மிகப்பெரிய தொடருக்காக ஏற்கனவே இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்திய அணியானது பயிற்சியை முடித்து தற்போது நாளைய போட்டிக்காக தயாராகியுள்ளது. இந்த தொடருக்கு முன்னர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsENG 1

- Advertisement -

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் எந்தெந்த பவுலர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வேகப்பந்து வீச்சாளர்களாக யார் ? யார் ? அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெக்ரா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா ஆகிய பவுலர்கள் அங்கிருக்கும் வேளையில் தற்போது முக்கியமான 3 வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிட்டு கூறியுள்ள நெஹ்ரா கூறுகையில் :

Shami

நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகிய மூவருடன் தான் நாம் களமிறங்க வேண்டும். ஏனெனில் அவர்களது அனுபவத்திற்கும் ஏற்கனவே அவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியதிற்க்கும் மதிப்பு கொடுத்து அவர்களை விளையாட வைக்க வேண்டும். இந்த 3 வேகப்பந்து வீச்சாளர்கள் தவிர்த்து நான்காவதாக வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் அது அணியின் நிர்வாகம் மற்றும் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரின் கருத்தினை பொருத்து உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்யலாம்.

ishanth 2

மற்றபடி இந்த மூவரையும் எவ்வித காரணமும் இன்றி மாற்றக்கூடாது என நெஹ்ரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சிராஜ் நல்ல பந்துவீச்சாளர் தான் தற்போது சிறப்பாக பந்து வீசுகிறார் இருந்தாலும் அவர் தனது வாய்ப்புக்காக காத்திருந்துதான் ஆக வேண்டும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement