நியூசிலாந்து அணியை வீழ்த்த இவங்க 5 பேர் போதும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் நமக்கு தான் – நெஹ்ரா கணிப்பு

Nehra
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

INDvsNZ

ஐசிசி முதன்முறையாக நடத்தும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் 20 வீரர்கள் மற்றும் நான்கு பேக்கப் வீரர்கள் என 24 பேர் கொண்ட பெரிய குழு இங்கிலாந்து செல்ல உள்ளது. இந்த போட்டியில் யார் ? யார் ? விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மதிதியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்தப் போட்டி குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான நெஹ்ரா இந்த இறுதிப் போட்டியில் விளையாடும் 5 பவுலர்கள் குறித்து பேசுகையில் :

shami

இரண்டு அணிகளிலுமே சிறந்த பவுலர்கள் இருக்கின்றனர். இருப்பினும் இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பும்ரா, ஷமி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு சற்று அச்சுறுத்தலாக இருப்பார்கள். அதேபோன்று இஷாந்த் சர்மாவின் அனுபவமும் இந்த போட்டியில் கைகொடுக்கும் இந்த போட்டியில் பும்ரா, ஷமி, இஷாந்த் தவிர அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 5 பந்துவீச்சாளராக களமிறங்கவேண்டும்/

Ashwin-1

ஒருவேளை பிட்ச் பசுமையாக இருந்தால் ஒரு ஸ்பின்னரை குறைத்து விட்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் உடன் விளையாட வேண்டும் என்றால் சிராஜை அணிக்குள் கொண்டு வரலாம் இப்படி 5 பவுலர்களை வைத்து விளையாடும் போது நிச்சயம் வெற்றி நமக்குத்தான் என்று நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement