இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இவர் இரட்டைசதம் அடிப்பார் – நெஹ்ரா நம்பிக்கை

- Advertisement -

சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களும் கேப்டன் விராட் கோலி அடித்தார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

anderson

- Advertisement -

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ஆசிஷ் நெஹ்ரா “நான் இங்கு ஒன்று இரண்டு சதங்களை பற்றி பேசவில்லை. அடுத்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தால் கோலி நிச்சியமாக 250 ரன்கள் அடிப்பார் என நம்புகிறேன். அதுதான் கோலியின் தனித்தன்மை. முதல் போட்டியில் அஸ்வின் அவுட்டான பின்பும் அதிரடியாக அடித்து ஆடாமல் அவர் நிதானமாக ரன்களை குவிப்பதிலே கவனம் செலுத்தினார் ” என்றார்.

மேலும இது குறித்து பேசிய அவர் “கோலியின் நேற்றைய இன்னிங்ஸ் பார்த்தபோது அவரின் நம்பிக்கை சற்று அதிகமாக வெளிப்பட்டது. அவர் அவுட்டானது மிகவும் மோசமான பந்தால்தான், அந்தப் பந்து வழக்கத்தை விட மிக தாழ்வாக வந்தது. விராட் கோலி ஒரு தனித்துவம் பேட்ஸ்மேன ஆவார். ஆட்டைத்தை எதிர்கொள்ளும் விதமும் அவரது அணுகுமுறையும் எப்பொழுதும் மற்ற பேட்ஸ்மேன்களை விட தனித்து சற்று வித்தியாசமாகவே இருக்கும்.

kohli

அவர் அதிகமாக பந்தை தடுத்து ஆடி நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால் நேற்றையப் போட்டியில் பார்த்தேன். என்றார் ஆசிஷ் நெஹ்ரா.நெஹ்ரா கணித்தது போல் வருகின்ற இரண்டாவது போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் எடுக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

Kohli 1

மேலும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்தால் விராட் கோலி 250 ரன்கள் அடிப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement