தோனிக்கு மாற்றாக வந்த இவரை தண்ணீர் பாட்டில் குடுக்க வைக்குறீங்க ? அவரை ஏன் அணியில் சேர்க்க மாற்றீங்க – நெஹ்ரா காட்டம்

Nehra
- Advertisement -

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் பாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் இவ்வளவு அமளிதுமளிகள் நடைபெற்று வர எப்போதும் போல் தோனி மிகவும் கூலாக இருக்கிறார். இதனைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி அவருக்கான மாற்று வீரராக ஒருவரை தேர்வு செய்து தயார் செய்து வருகிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் ரிஷப் பண்ட்தான் அந்த மாற்று வீரர். அவர் இந்திய அணிக்கு ஆடத் தொடங்கி டெஸ்ட் போட்டிகளில் மிகவும் அபாரமாக ஆடி தன்னை நிரூபித்தார். ஆனால், சமீபகாலமாக கடுமையாக சொதப்பி வருகிறார் பன்ட்.

இருந்தாலும் அவரது திறமை காரணமாக மீண்டும் இந்திய அணி அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் அவரை ஏன் இன்னும் வெளியே உட்கார வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று ஆசிஸ் நெஹரா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு ஆதரவு நிறைய தேவைப்படும். இந்திய அணியில் தற்போதும் கூட 5 மற்றும் 6 இடங்கள் காலியாக உள்ளது. அதற்கான வீரர்கள் தேவைப்படுகிறார்கள். கேஎல் ராகுல் தற்போது 5வது இடத்தில் களம் இறங்கி வருகிறார். ஆனால் அந்த இடத்திற்கு உண்மையில் களம் இறக்கப்பட வேண்டிய ரிஷப் பண்ட் சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுத்து, வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவர் தனக்கு கொடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது நிதர்சனம். ஆனால் 22 வயதிலேயே அவரின் திறமை நம் அனைவருக்கும் தெரியும் அவரை மீண்டும் ஆட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆசிஸ் நெஹரா. சமீபத்தில் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

Pant-1

பண்ட் மட்டுமில்லாது சஞ்சு சாம்சனும் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ரன்களை குவித்து வரும் சாம்சனுக்கு ஆதரவுகள் அதிகம் இருந்தாலும், தேர்வுக்குழு மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத காரணத்தினால் அவரும் இந்திய அணியில் திறமை இருந்தும் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement