தேவையில்லாமல் தோனியை கண்டபடி திட்டிட்டேன். ஆனா அது தப்புன்னு நிறைய முறை யோசிச்சிட்டேன் – சீனியர் வீரர் உருக்கம்

dhoni
dhoni
- Advertisement -

தோனி இந்திய அணிக்காக கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமானார். முதல் சில போட்டிகளில் அவருடைய திறமை யாருக்கும் தெரியவில்லை. முதல் ஐந்து போட்டிகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது 148 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

இந்தத் தொடர்தான் தோனிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் ஒரு போட்டியின்போது ஆஷிஸ் நெஹ்ரா வீசிய பந்தில் அப்ரிடி சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு பந்தினை அடிக்க பந்து எட்ஜ் ஆகி பின்னால் சென்றது. அதனை கீப்பராக இருந்த தோனி விட்டுவிடுவார். அப்போது நெஹ்ரா கண்டபடி தன் வாயில் வந்தபடி தோனியை திட்டுவார்.

இதுகுறித்த வீடியோ அப்போது இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இளம்வீரர் ஒருவர் இதுபோன்று தவறு செய்யும்போது அது பெரிய விடயமாக மாறாது. ஏனெனில் அணியில் சீனியர் வீரர்கள் இதுபோன்று இளம் வீரர்களை கடிந்து கொள்வது சாதாரணம் தான். ஆனால் குறித்து தற்போது நெஹ்ரா பேசியுள்ளார்.

Nehra

அதன்படி நெஹ்ரா கூறியதாவது : அனைவரும் அந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டி என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அகமதாபாத்தில் நடந்த நான்காவது போட்டியாகும். இந்த போட்டியில் எனது பந்தை சிக்சருக்கு விரட்டினார் அப்ரிடி.
அடுத்த பந்தையும் அவர் சிக்ஸர் அடிக்க ஆசைப்படுவார் என்று நினைத்தேன்.

- Advertisement -

அதற்கு ஏற்றவாறு நான் சிறப்பாக பந்துவீசி அவரை எட்ஜ் செய்ய வைத்தேன். அந்த பந்து ராகுல் டிராவிட்டிற்கும், தோனிக்கும் இடையில் சென்று விழுந்தது. இதனால் தோனியை கண்டபடி திட்டினேன். அந்த போட்டியில் நாங்கள் தோற்றுவிட்டோம் . போட்டி முடிந்த பின்னர் தோனியும், ராகுல் டிராவிட்டும் நான் செய்தது சரிதான் என்று கூறினார்.

ஆனால் அது தவறு என எனக்கு எப்போதும் தெரியும். தற்போதும் அதை நினைத்து வருத்தப் படுகிறேன் என்று கூறினார் ஆஷிஸ் நெஹ்ரா. களத்தில் இதுபோன்று நடைபெறும் போது நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அணிவீரர்களிடையே சீனியர் ஜுனியர் வித்தியாசம் கிடையாது ன்றும் நெஹ்ரா கூறினார்.

Advertisement