மூக்குத்தி அம்மன் படத்தை பாக்க ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருக்கேன் – வீடியோ பதிவை வெளியிட்ட இந்திய வீரர்

Rj-balaji-1

கொரோனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு படங்கள் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் தள்ளிக் கொண்டே போகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் சிலர் பெரும் நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற தளங்களில் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

Rj balaji

அந்த வகையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக ஆர். ஜே. பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, இந்துஜா உள்ளிட்டோர் நடித்த மூக்குத்தி அம்மன் வெளியாகி உள்ளது. இந்த படம் நிஜ கடவுளுக்கும், மனிதரால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து கன்னியாகுமரி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு விருந்தாக டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியாகி உள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள சேலத்து வீரர் நடராஜன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது :

“மூக்குத்தி அம்மன்” தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை காண நான் ரொம்ப ஆவலாக இருக்கின்றேன். நான் மட்டுமின்றி என்னுடைய குடும்பமும், என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். மேலும் ஆர்.ஜே பாலாஜி அண்ணனுக்கு எங்க ஊரில் ரசிகர்கள் அதிகம். அவரின் கமென்டரியை மிகவும் விரும்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்திய அணியில் நடராஜன் தேர்வானதிற்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் விதமாகவும் நடராஜனை நயன்தாரா பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பதாவது : உங்களது பயணத்திற்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கும் வாழ்த்துக்கள். நீங்களும், உங்கள் குடும்பமும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை காண ஆவலாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.