ரோஹித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மாற்றங்களும், அதிசயங்களும் நிகழும் – நயன் மோங்கியா

Rohith
- Advertisement -

இந்திய அணியில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா புதிய துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.

Rohith

- Advertisement -

ஏற்கனவே பிரசாத், கங்குலி மற்றும் சஞ்சய் பாங்கர் ஆகியோர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான நயன் மோங்கியா ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

டெஸ்ட் போட்டியின் துவக்க வீரராக விளையாடுவது என்பது ஒரு சிறந்த விடயமாகும். மேலும் அந்த இடத்தில் விளையாடுவது ஒரு சிறப்பான பணியாகும். மேலும் அந்த சிறப்பான பணியை துவக்க வீரராக நிச்சயம் யாராக இருந்தாலும் செய்ய வேண்டும். அந்த வகையில் ரோகித் சர்மா துவக்க வீரராக இந்திய அணிக்கு சிறப்பான பங்கை அளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

Rohith-1

மேலும் இந்திய அணிக்காக ரோஹித் பல சாதனைகளையும் பல அதிசயங்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் நடத்தி காண்பிப்பார். மேலும் எட்டமுடியாத இலக்கயும் அவரது ஆட்டத்தால் இந்திய அணி எட்டும் என்பது என் நம்பிக்கை ஏனெனில் துவக்கம் நன்றாக இருந்தால் போட்டியின் முடியும் நன்றாகத் தான் அமையும் என்பது என்னுடைய கருத்து என்று நயன் மோங்கியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement