டெஸ்ட் போட்டின்னா இவர் கட்டாயம் இந்திய அணியில் இருக்கனும். தேவையில்லாம நீங்களே ஒரு முடிவு எடுக்காதீங்க – கொதித்த மோங்கியா

Mongia
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்றதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என்று பலரும் கூறிவருகின்றனர். 200 ரன்கள் கூட எடுக்காமல் தோல்வி அடைந்தது இந்திய அணி.

Ind-lose

- Advertisement -

இதற்கு காரணமாக பல முன்னாள் வீரர்கள் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹாவை எடுக்காமல் ரிஷப் பண்ட்டை எடுத்தது தான் காரணம் என்று கூறிவருகின்றனர். குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் ஆடும்போது விருத்திமான் சஹா கீப்பராக இருப்பார். வெளிநாடுகளில் ஆடும்போது ரிஷப் பண்ட் கீப்பராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் விருத்திமான் சஹா அருமையாக கீப்பிங் செய்வார். வெளிநாடுகளில் கீப்பிங்கை விட பேட்டிங் முக்கியத்துவம் தேவை. இதன் காரணமாக இப்படி என்ன சொன்னாலும் முன்னாள் வீரர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பேசி வருகின்றனர்.

Pant

இதுகுறித்து பேசிய முன்னாள் தேர்வுக் குழு தலைவர் மற்றும் முன்னாள் இந்திய வீரர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது : சஹாவைதான் கீப்பராக எடுத்திருக்க வேண்டும். மேலும் ,வெளிநாட்டு ஆடுகளங்களில் சஹாவின் பேட்டிங்கை முடியாது என நீங்களாகவே குறைத்து மதிப்பிடுகிறீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளை இந்தியாவில் காத்திருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பன்ட்டிற்கு முன்னுரிமை கொடுகிறோம் என்ற பெயரில் சஹாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்சந்தீப் பாட்டில் இதே கருத்தை தான் தற்போது முன்னாள் விக்கெட் கீப்பர் நான் நயன் மோங்கியாவும் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது :

Saha-3

டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கை விட எப்போதுமே கீப்பிங்கிற்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். யார் கீப்பிங்கில் அதிக திறமை உள்ளவராக இருக்கிறார் அவரை தான் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement