இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று வெளியேறுவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தார்.
வெள்ளை தாடி வந்தா என்ன? விராட் கோலி 2027 வரை விளையாடுவார் : நவ்தீப் சைனி
ஆனாலும் தான் தொடர்ந்து 2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவேன் என்று விராட் கோலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அடுத்த உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதினாலும், தற்போதே விராட் கோலிக்கு 36 வயது ஆவதாலும் அவரது எதிர்காலம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது.
அதோடு நிர்வாகமும் அவரை முன்கூட்டியே ஓய்வுக்கு தள்ள அழுத்தத்தை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனது ஓய்வு குறித்து பேசியிருந்த விராட் கோலி கூறுகையில் : என்னுடைய தாடிக்கு வாரத்திற்கு மூன்று முறை டை அடிக்கிறேன். இல்லையெனில் வெள்ளை நிறமாக மாறுகிறது என ஜாலியாக ஒரு கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் விராட் கோலி எடுத்து கொண்ட புகைப்படத்தில் விராட் கோலியின் தாடி வெள்ளையாக இருந்ததால் மீண்டும் அவர் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்கிற வதந்திகளை சமூகவலைதளத்தில் பலரும் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தினை அளித்திருந்த நௌதீப் சைனி கூறுகையில் :
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தற்போது ஓய்வு பெறுவார் என்று நான் நினைக்கவில்லை. தாடி நரைத்தால் என்ன? அவர் இன்னும் மிகச் சிறப்பான வீரராகவே இருக்கிறார். என்னை பொறுத்தவரை 2027 ஒருநாள் உலக கோப்பை தொடர் வரை விராட் கோலி தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்.
இதையும் படிங்க : முடிவுக்கு வரும் முகமது ஷமியின் கரியர்.. இந்த சேன்ஸ் கெடைக்கலனா எல்லாம் ஓவர் – விவரம் இதோ
இன்றளவும் பிட்னஸிலும் சரி, பேட்டிங்கிலும் சரி விராட் கோலி தனக்கென ஒரு லெவலை செட் செய்து வைத்துள்ளார் என நவ்தீப் சைனி கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



