இந்த நாள் தான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் இதுதான் – மனம்திறந்த நவதீப் சைனி பேட்டி

Saini
- Advertisement -

இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். 27 வயதாகும் சைனி தற்போதைய இந்திய டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய அணி குறித்தும் அவருடைய கிரிக்கெட் வாழ்வு குறித்து மனம்திறந்த பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

எந்த நிலையை இப்போது நான் அடைந்திருக்கிறோனோ அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் இது ஒரு கனவாக இருக்கும் எனக்கும் அந்த கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. இந்திய அணிக்காக தேர்வானது என்னால் மறக்க முடியாது இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

Saini

மேலும் இந்திய அணிக்காக தேர்வான போது என்னுடைய கனவு நனவானது. முதலில் உள்ளூர் போட்டிகளில் விளையாடினேன். அதன்பிறகு ரஞ்சித் போட்டி அதன் பிறகு தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கான நிலை என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement