இயற்கையாகவே என்னிடம் உள்ள இந்த திறமைதான் எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் – நவதீப் சைனி பேட்டி

Saini

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அதிகபட்சமாக அரைசதம் அடித்தனர்.

Saini-1

அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக சைனி சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தொடர் நாயகன் நவ்தீப் சைனி கூறியதாவது : நான் துவக்கத்தில் சிவப்பு பந்து கிரிக்கட் விளையாடி வந்தேன். அதனால் எனக்கு ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பந்து வீசுவது சற்று சிரமமாக இருந்தது. ஆனால் தற்போது நான் தொடர்ந்து ஷாட்டர் பார்மட்டுகாக பயிற்சி செய்து வருகிறேன்.

மேலும் தற்போது சிறப்பாக பந்துவீச வழிகளை கற்றுக்கொண்டு வருகிறேன். என்னுடைய சீனியர் பவுலர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் வழிமுறையும் உத்வேகமும் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பந்துவீச உதவுகிறது. மேலும் என்னுடைய பந்துவீச்சில் வேகம் என்பது இயற்கையாகவே வந்துதான் என்றும் சைனி பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -