பும்ராவை தாண்டி இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளராக இவர் உருவெடுப்பார். இளம் வீரரை பாராட்டிய – தெ.ஆ நட்சத்திரம்

Bumrah
- Advertisement -

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றால் அது பேட்டிங்கில் பலம் மூலமே அதிகஅளவு பெற்றதாக இருக்கும். ஆனால் பும்ரா வருகைக்குப்பின் இந்திய அணி பவுலிங்கில் அசத்தி வருகிறது. மேலும் அவருடன் பந்துவீசும் அனைவரும் சிறப்பாக பந்து வீசி வருவதால் தற்போது பந்துவீச்சின் மூலமும் இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது.

bumrah 1

- Advertisement -

அதன்படி தற்போது உள்ள இந்திய அணியில் நல்ல பௌலிங் ஆக்சன், கூடுதல் வேகம் மற்றும் நல்ல ஸ்விங் என அனைத்து விடயத்திலும் இளம் வேகப்பந்து வீச்சாளரான சைனி சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்காக அறிமுகமான அவர் எதிரணியை தனது பந்துவீச்சின் மூலம் மிரட்டி தேர்வாளர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.

தற்போது நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்து சிறப்பாக பந்துவீசிய அவர் தற்போது தென் ஆப்பிரிக்க தொடரிலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் உதவி பேட்டிங் பயிற்சியாளர் க்ளுஸ்னர் சைனியை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்பதால் சைனியை எனக்கு ஏற்கனவே தெரியும்.

Saini-1

மேலும் அவருடைய பந்துவீச்சை நான் பலமுறை நேரில் பார்த்திருக்கிறேன். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் அவர் சிறப்பான ஆக்சன் மற்றும் ஃபிட்னஸ் உடைய வீரர் ஆவார். மேலும் அவருடன் பேசியதிலிருந்து அவர் தொடர்ந்து 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்துவீச விரும்புவதாக தெரிந்து கொண்டேன். அவர் தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு இதே வகையில் சிறப்பாக பந்து வீசினார். பும்ராவை தாண்டி இந்தியாவின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆக மாற அனைத்து தகுதிகளும் சைனியிடம் இருக்கிறது என்று க்ளுஸ்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement